ADDED : ஜன 21, 2026 08:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தில் இருந்து திருப்பதி கன்னியாகுமரி செல்லும் விரைவு ரயில்களின் பெட்டிகள் எல்.எச்.பி., பெட்டிகளாக மாற்ற ரயில்வே நிர்வாகம் பரிந்துரைத்துள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து திருப்பதிக்கும் கன்னியாகுமரிக்கும் வாரத்தில் மூன்று நாட்கள் விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இரு வழித்தடத்திற்கும் ஒரே பெட்டிகள் சென்று வருகின்றன. இவற்றில் பழைய பெட்டிகளுக்கு பதிலாக எல்.எச்.பி., வகை பெட்டிகள் இணைத்து இயக்க ரயில்வே நிர்வாகம் பரிந்துரைத்துள்ளது. மார்ச் இறுதி முதல் பயன்பாட்டிற்கு வரும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

