ADDED : ஜன 21, 2026 08:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: 'தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில், நாளை மறுநாள் முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்றும், நாளையும் பரவலாக, வறண்ட வானிலை காணப்படும்.
சில இடங்களில், அதிகாலை லேசான பனிமூட்டம் காணப்படும். தமிழக கடலோர மாவட்டங்களில், சில இடங்களில், நாளை மறுநாள் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். சில இடங்களில், அதிகாலை லேசான பனிமூட்டம் காணப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

