ADDED : நவ 20, 2024 12:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., இணையதளத்தின் முகப்பு பக்கம் ஆங்கிலத்தில் இருக்கும். ஆனால், நேற்று காலை திடீரென அது ஹிந்திக்கு மாறியது.
இது, அப்பட்டமான ஹிந்தி திணிப்பு என்று, முதல்வர் உள்ளிட்ட தமிழக கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இதையடுத்து, எல்.ஐ.சி., வெளியிட்ட செய்தியில், 'இணையதளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே, முகப்பு பக்கம் ஹிந்தி மொழிக்கு மாறியுள்ளது.
'தற்போது, அது சரி செய்யப்பட்டு, ஆங்கிலம், ஹிந்தியில் தெரியும் அளவுக்கு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. சிரமத்திற்கு வருந்துகிறோம்' என்று கூறப்பட்டுள்ளது.

