ADDED : ஜன 22, 2024 06:49 AM

திருப்பூர்:
ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை:
அயோத்தி ஸ்ரீ ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சி சீரும் சிறப்பாக நடக்க உள்ளது. நீண்ட நெடிய ஹிந்துக்களின் போராட்டத்துக்கு பின், கோர்ட் தீர்ப்பின் மூலம் தீர்வு கிடைத்தது.
பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வந்த கோவிலின் கும்பாபிஷேக நிகழ்ச்சியையொட்டி நாட்டு மக்கள் அனைவரும் குழந்தை ஸ்ரீ ராமனை வரவேற்று தரிசிக்க தயாராகி வருகின்றனர்.
ஒட்டுமொத்த ஹிந்துக்களும் இவ்விழாவை கொண்டாட முடிவு செய்து விட்டனர். தமிழக அரசு இவ்விழாவை சிறுபான்மை ஓட்டு வங்கிக்காக புறக்கணித்து வருவதற்கு, பெரும்பான்மை ஹிந்து சமுதாயம் வருகின்ற தேர்தலில் பதிலடி தருவர்.
ஐநுாறு ஆண்டு கால ஹிந்துக்களின் எழுச்சி போராட்டத்துக்கு பின், இந்த தீர்வு கிடைத்துள்ளது. ஸ்ரீ ராமர் கோவிலின் பிராண பிரதிஷ்டை நிகழ்ச்சியை ஒட்டு மொத்த மக்களும் கொண்டாட தயாராகி விட்டனர்.
தமிழகம் என்றும் ஆன்மிகம் பக்கம் நின்று, கோலாகலமாக கொண்டாட தயாராக உள்ளது. அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த ஆன்மிக எழுச்சி தினத்தை உள்ளுணர்வோடு ஒன்று பட்டு அனைவர் வீடுகளிலும், மாலை கார்த்திகை தீபம் போல அகல் விளக்குகளில் தீபமேற்றி ஒளி வெள்ளத்துடன், ஸ்ரீ ராமபிரானை வணங்குவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.