sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 19, 2025 ,மார்கழி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

குறுகிய லட்சியங்கள் குற்றங்களே: கலாம்

/

குறுகிய லட்சியங்கள் குற்றங்களே: கலாம்

குறுகிய லட்சியங்கள் குற்றங்களே: கலாம்

குறுகிய லட்சியங்கள் குற்றங்களே: கலாம்


UPDATED : ஆக 03, 2011 02:33 AM

ADDED : ஆக 01, 2011 11:36 PM

Google News

UPDATED : ஆக 03, 2011 02:33 AM ADDED : ஆக 01, 2011 11:36 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:''தமக்கென்று ஒரு தனித்துவத்தை வகுத்து கொண்டு இயங்குவோர் மட்டுமே வெற்றி பெறுகின்றனர்; வரலாறும் கூட அவர்களைத்தான் நினைவு கூர்கின்றது.

குறுகிய லட்சியங்கள் குற்றமாகவே கருதப்படும்,'' என, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேசினார்.

'யூத் மீட் - 2011' விழா, கோவை நவக்கரையிலுள்ள ஏ.ஜே.கே., கல்லூரி வளாகத்தில் நேற்று நடந்தது.



விழாவில், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பேசியதாவது:ஓயாய அறிவுத் தேடல் ஒன்றே மாணவர்களை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும். 'நான் அனைத்துக்கும் தகுதியுள்ளவனாகப் பிறந்தேன். நல்லெண்ணங்களோடும், நம்பிக்கையோடும் பிறந்தேன். கனவுகளோடும் சிந்திக்கும் திறனோடும் பிறந்தேன். எனக்கு சிறகுகள் உள்ளன. நான் பறப்பேன், பறப்பேன், பறப்பேன்' என்று உங்களுக்குள் திரும்பத் திரும்ப கூறிக் கொள்ளுங்கள். இந்த புவியில், இளைஞர்களின் ஆற்றல்தான் பெரிய ஆற்றல். இந்தியாவின் சமூக பொருளாதார நிலையை மாற்றும் சக்தி மாணவர்களின் செழுமையான சிந்தனைக்கு மட்டுமே உண்டு. 2020ம் ஆண்டுக்குள் முழுமையான வளர்ச்சியை எட்ட வேண்டும் என்கிற வல்லரசுக் கனவு, இந்தியாவுக்கு உண்டு.



இந்த லட்சியத்தை எட்ட, தனித்துவம், படைப்பாற்றல், புதுமை மற்றும் சுதந்திர சிந்தனைகள் நிறைந்தவர்களாக மாணவர்கள் மாற வேண்டும். பல்பையும், வெளிச்சத்தையும் பார்க்கும்போது தாமஸ் ஆல்வா எடிசனும், விமானங்களைப் பார்க்கும்போது ரைட் சகோதரர்களும், கணிதம் என்றதும் சீனிவாச ராமானுஜமும், 'பிளாக் ஹோல்' என்றதும் சுப்ரமணியன் சந்திரசேகரும் நினைவுக்கு வருகின்றனர். இவர்கள் அனைவரும் தனித்துவத்துடன் இயங்கியவர்கள்; தமக்கென்று ஒரு தனித்துவத்தை வகுத்து கொண்டு இயங்குவோர்தான் வெற்றி பெறுகின்றனர்; வரலாறும் கூட அவர்களைத்தான் நினைவு கூர்கின்றது, இதை மாணவர்கள் மறந்துவிடக் கூடாது.



பெரிய பெரிய லட்சியங்கள், அறிவுத் தேடல், கடின உழைப்பு, விடா முயற்சி போன்றவை மாணவர்களுக்கு அவசியம். குறுகிய லட்சியங்கள் குற்றமாகவே கருதப்படும். ஒவ்வொருவருக்கும் கனவுகள் வேண்டும்; கனவுகள் படைப்புத்திறனை நோக்கி அழைத்துச் செல்லும். படைப்புத் திறன், சிந்தனையாற்றலை வளர்க்கும். சிந்தனையாற்றல் அறிவை வளர்க்கும்; அறிவுதான் உங்களை உயர்ந்த மனிதர்களாக்கும். எனவே, கனவுகளை வளர்த்துக் கொள்ளுங்கள்.இவ்வாறு, அப்துல் கலாம் பேசினார்.



ஏ.ஜே.கே., கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் அஜித் குமார் அறிமுக உரையாற்றினார். பாரதியார் பல்கலை துணைவேந்தர் சுவாமிநாதன், கோவை அண்ணா தொழில்நுட்ப பல்கலை துணைவேந்தர் கருணாகரன், கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலை துணைவேந்தர் ராமச்சந்திரன் தெக்கேடத், அவினாசிலிங்கம் பல்கலை துணை வேந்தர் ஷீலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



'அணு ஆயுதங்கள் தேவையே':கல்வி நிறுவனங்களுக்கு கலாம் வருகிறார் என்றால், கேள்வி - பதில் அமர்வு கட்டாயம் இருக்கும். விமானத்துக்கு தாமதமாகிவிடும் என்று தெரிந்தும், மாணவர்களை ஏமாற்ற விரும்பாத கலாம், 'மூன்று கேள்விகளுக்கு பதில் அளிக்கிறேன். மீதி கேள்விகளை இ-மெயில் செய்யுங்கள்; 24 மணி நேரத்துக்குள் பதில் வரும்' என்று கூறினார். 'இந்தியாவை வல்லரசாக்குவதில் எம்மைப் போன்ற மாணவர்களின் பங்கு என்ன' என்று கேட்ட மாணவியிடம், 'உங்கள் லட்சியம் என்ன' என்று கேட்டார் கலாம். 'வக்கீல் அல்லது ஐ.ஏ.எஸ்., ஆகி மக்களுக்கு நன்மை செய்வேன்; அநீதிகளுக்கு எதிராக போராடுவேன்' என்றார் மாணவி. உடனே ''இந்த நம்பிக்கைதான் உங்களின் செயல். என்னால் முடியும், நம்மால் முடியும் என்னும் எண்ணம் இந்தியாவால் முடியும் என்பதாக மாறும் என்றார். 'பெண்கள் மீதான பாலியல் அத்துமீறல்களை எப்படி எதிர்கொள்வது' என்று கேட்ட மற்றொரு மாணவிக்கு, ''இந்த மனோநிலையை மாற்றும்படியான நன்னெறி கல்விதான் தீர்வு,'' என்றார். 'அணு ஆயுதங்கள் தேவையா' எனக் கேட்ட மாணவனிடம், ''நம்மைச் சுற்றி அனைவரும் ஆயுதங்களோடு இருப்பதால்தான் அணு ஆயுதங்களின் தேவை உருவாகிறது,'' என, ரத்தினச் சுருக்கமாக பதிலளித்து, புறப்பட்டார்.








      Dinamalar
      Follow us