கள்ளச்சாராயம்: 16பேர் பலி எதிரொலி : மாவட்ட கலெக்டர் இடமாற்றம் எஸ்.பி., சஸ்பெண்ட்
கள்ளச்சாராயம்: 16பேர் பலி எதிரொலி : மாவட்ட கலெக்டர் இடமாற்றம் எஸ்.பி., சஸ்பெண்ட்
UPDATED : ஜூன் 19, 2024 10:42 PM
ADDED : ஜூன் 19, 2024 12:50 PM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கருணாபுரம் பகுதியில் ஒரே நாளில் 16பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் இடமாற்றம் செய்யப்பட்டார் .மாவட்ட எஸ்.பி., சஸ்பெண்ட் செய்யப்ப்டடார். இவ்வழக்கு சிபிசிஐடி வசம் தமிழக அரசு ஒப்படைத்து உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று (ஜூன் 19) ஒரே நாளில் அடுத்தடுத்து கள்ளக்குறிச்சியை சே்ர்ந்த பிரவீன், சுரேஷ், சேகர், மற்றொரு சுரேஷ், கந்தன், ஜெகதீசன், ஆறுமுகம், தனிக்கொடி ,வீர சோழபுரம் கிராமத்தை சேர்ந்த டேவிட் உள்ளிட்டோர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 16ஆக அதிகரித்து உள்ளது. கள்ளச்சாராயம் அருந்தியவர்களில் 65 பேர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையிலும புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 16 பேருக்கும், சேலம், விழுப்புரம் மருத்துவமனைகளில் 13 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. .இந்நிலையில் புதுச்சேரி மாநிலம் ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டு இருந்த 15 பேரில் புதுச்சேரியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, மணி, மற்றும் இந்திரா என்ற பெண் என மூன்று பேர் பலியாகினர். மேலும் முண்டியம்பாக்கத்தை சேரந்த மணிகண்டன் என்பவர் பலியாகி உள்ளார். மீதமுள்ளவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
ஒரே நாளில்16பேர் உயிரிழந்ததால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், கள்ளச்சாராயம் குடித்து தான் உயிரிழந்திருப்பதாக சந்தேகிக்கின்றனர். இது குறித்து போலீசாருடன் இணைந்து வருவாய்த்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
இந்நிலையில், கண்ணுக்குட்டி என்ற சாராய வியாபாரி உட்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சிக்கு அமைச்சர்கள் விரைவு
கள்ளக்குறிச்சியில் ஏற்கனவே 16 பேர் பலியான நிலையில் பொதுப்பணித்துறை எ,வ,வேலு, மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் ஆகியோர் கள்ளக்குறிச்சிக்கு விரைந்தனர். பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு விரைவாக நிவாரணம கிடைக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டதை தொடரந்து அமைச்சர்கள் நேரில் சென்றனர். மேலும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களையும் சந்தித்து ஆறுதல் கூறினர். அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் உடல் நலன் குறித்தும் கேட்டறிந்தனர்.
தடயங்கள் சேகரிப்பு
சம்பவ இடத்தில் சேகரிக்கப்பட்ட தடயங்கள் விழுப்புரம் மாவட்ட தடயவியல் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
பாக்கெட்சாராயம் காரணம் ? அரசு விளக்கம்
கள்ளக்குறிச்சியில் பலர் இறப்பிற்கு பாக்கெட் சாாராயம் காரணமாக இருக்கலாம் என அரசு விளக்கம் அளித்துள்ளது.மேலும் இறந்தவர்களின் உடலகள் உடல்கூராய்வுக்கு பின்னரரே
காரணம் தெரியவரும் என தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக கண்ணுகுட்டி என்பவர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் 200 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும் , மெத்தனால் கலந்திருப்பதது கண்டுபிடிககப்பட்டு இருப்பதாகவும் தமிழக அரசு தெரிவித்து உள்ளது.
கலெக்டர் இடமாற்றம் எஸ்.பி., சஸ்பெண்ட்
கள்ளச்சாராய பலி விவகாரத்தில் கலெக்டர்ஷ்ரவன்குமார்பணியிடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக எம்.எஸ் பிரசாந்த் என்பவர் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டு உள்ளதாக தமிழக அரசு தெரிவித்து உள்ளது. மேலும் மாவட்ட எஸ்.பி., சமயங்சிங்மீனாவை சஸ்பெண்ட் செய்யப்பட்டு தமிழக அரசு உத்தரவிட்டு உ்ளளது.மாவ்டட எஸ்பியாக ரஜத்சதுர்வேதி நியமிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்ப்பட்டு உள்ளது.
இவ்விவகாரம் தொடர்பாக மதுவிலக்கு அமாலக்கப்பிரிவு துணை கண்காணி்ப்பாளர் தமிழ்ச்செல்வன் சஸபெண்ட் செய்யப்பட்டு உள்ளார். தொடர்ந்து மதுவிலக்குபிரிவை சேர்ந்த கவிதா , பாண்டி செல்வி , பாரதி ஆனந்தன், ஷிவ்சந்திரன் மற்றும் காவல் உதவி ஆய்வாளர்கள் பாஸ்கரன், மனோஜ் ஒன்பது பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர்.மேலும் இவ்விவகாரத்தை தீர விசாரிக்கவும் மேல் நடவடிக்கைக்காகவும் தமிழக அரசு சிபிசிஐடி வசம் ஒப்படைத்து உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
சிறப்பு மருத்துவ குழுக்கள் விரைவு
விழுப்புரம் மருத்துவக்கல்லூரியை சேர்ந்த 4 சிறப்பு மருத்துவ குழுக்கள் கள்ளச்சராயம் விபத்து நிகழ்ந்த் பகுதிக்கு விரைந்துளளனர். மேலும் சேலம் திருவண்ணாமலையில் இருந்தும் சிறப்பு மருத்துவகுழுக்கள் கள்ளக்குறிச்ச்சி பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் 12 அவசர கால ஊர்திகள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை முன்பு தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து அவசர கால சிகிசசை மருந்துள் சேலம் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைகளுக்குஅனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தவர்களில் நாராயணசாமி, சுப்பிரமணி மறறும் ராமு , சங்கர் மரணம் அடைந்தனர். மீதமுள்ளவர்களுக்கு தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் படுக்கை எண்ணிக்கை 50 ஆக அதிகரிக்கவும் , கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரிக்கு 38 சிறப்பு மருத்துவ குழுக்கள்அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. மேலும் வெண்டிலேட்டர் உள்ளிட்ட உயிர்காக்க கூடிய அத்தியாவசிய மருந்துகள் கையிருப்பில் வைத்துக் கொள்ளவும் மருத்துவத்துறை உத்தரவிட்டு உள்ளது.
இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும்:முதல்வர்
கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் இறந்த செய்திகேட்டு வேதனை அதிர்ச்சி அடைந்தேன். இது போன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். கள்ளச்சாராய விவகாரத்தில் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. கள்ளச்சாராய விவகாரத்தில் குற்றத்தை தடுக்க தவறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. சமூகத்தை பாழ்படுத்தும் இத்தகைய குற்றங்கள் இரும்புகரம் கொண்டு அடக்கப்படும். இவ்வாறு முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.
கவர்னர் ரவி இரங்கல்
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்தது அதிர்ச்சி அளிக்கிறது. விஷ சாராயம் குடித்து பலியான குடும்பத்தினருக்கு நெஞ்சார்ந்த இரங்கலைதெரிவித்து கொள்கிறேன் . தமிழகத்தில் அவ்வப்போது கள்ளச்சாராய உயிரிழப்பு செய்திகள் வெளி வருகின்றன . சட்ட விரோத மது தயாரிப்பு , நுகர்வை தடுப்பதில் உள்ள குறைபாட்டை இது பிரதிபலிக்கிறது. இவ்வாறு அறிக்கையில் கவர்னர் ரவி தெரிவித்து உள்ளார்.
விஷ சாராயம் உயிரிழப்புக்கு காவல்துறையே பொறுப்பு :அமைச்சர் வேலு
கருணாபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் மெத்தனால் கலந்த விஷசாராயத்தை அருந்தி உள்ளனர். விஷ சாராயம் தொடர்பான தகவல் கிடைத்த உடன் முதல்வர் ஸ்டாலின் எங்களை அனுப்பி வைத்தார். கள்ளக்குறிச்சியில் விரும்பத்தகாத சம்பவம் நடந்துள்ளது. விஷசாராய விவகாரத்தில் காவல்துறை மெத்தனமாக இருந்துள்ளது. விஷ சாராயஉயிரிழப்பிற்கு காவல்துறையே பொறுப்பு .தவறு நடந்ததை நியாயப்படுத்த விரும்பவில்லை. விஷ சாாராயம் சம்பவம் என்பது காலம்காலமாக நடந்து வந்திருக்கிறது. . அரசுகள் நடவடிக்கைகளை எடுக்கின்றன. கள்ளச்சாராயம் விற்போரை அரசு ஒரு போதும் ஊக்கப்படுத்துவதில்லை. இறந்தோரின் உடல்கள் உடல்கூராய்வு செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. . கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் ஒன்பது பேர் கவலைக்கிடமாக உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கான சிகிச்சை முறைகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இவ்வாறு அமைச்சர் வேலு கூறினார்.