பா.ம.க., ஆட்சிக்கு வந்ததும் மதுக்கடைகள் மூடப்படும்
பா.ம.க., ஆட்சிக்கு வந்ததும் மதுக்கடைகள் மூடப்படும்
ADDED : டிச 14, 2025 03:24 AM

நெய்வேலியில் என்.எல்.சி.,க்காக, நிலம் கொடுத்தவர்களுக்கு தற்காலிக பணி மட்டுமே வழங்குகின்றனர். என்.எல்.சி.,யின் சமூக பொறுப்புணர்வு நிதி முழுதும், ராஜஸ்தான், பீஹார் என வட மாநிலங்களுக்கு தான் செல்கிறது.
என்.எல்.சி.,யின் சுரங்க நீர் சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப்படுவதால், நிலங்களில் கரி படிந்து விவசாயம் பாதிக்கிறது. நெய்வேலியில் குடிநீரில் பாதரச அளவு அதிகரித்துள்ளது.
கடந்த சட்டசபை தேர்தலில் அளித்த வாக்குறுதிப்படி, டாஸ்மாக் கடைகளை தி.மு.க., அரசு மூடவில்லை. அதற்கு மாறாக, புதிய கடைகளை திறந்து, மாணவர்களுக்கும் கூட, குடிப்பழக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர். பா.ம.க., ஆட்சி பொறுப்பேற்றவுடன், முதல் கையெழுத்து மதுக்கடைகளை மூடுவது தான். தமிழகத்தை மது இல்லா மாநிலமாக்க, பா.ம.க., தலைவர் அன்பு மணிக்கு, மகளிர் அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும்.
- சவுமியா
தலைவர், பசுமை தாயகம் அமைப்பு

