தேர்தல் சீசனுக்கு மட்டும் வந்து செல்பவர் அமித் ஷா
தேர்தல் சீசனுக்கு மட்டும் வந்து செல்பவர் அமித் ஷா
ADDED : டிச 14, 2025 03:24 AM

பூரண மதுவிலக்கு என்பது உலகம் முழுக்க தோல்வி அடைந்த திட்டம். இது எங்கேயும் வெற்றியடையவில்லை. மதுவை கட்டுப்படுத்தலாமே தவிர முழுமையாக தடை செய்ய முடியாது. குஜராத்தில் பூரண மதுவிலக்கு என்பது வெறும் பேப்பரில் தான் இருக்கிறது. காந்தி பிறந்த ஊரான போர்பந்தரில் தான் மது இறக்குமதியே ஆகிறது.
தமிழகத்தில் தேர்தல் வரும்போது, அமித் ஷா, மோடி உள்ளிட்டவர்கள் அடிக்கடி வரத்தான் செய்வார்கள். தமிழ் உணவு தான் பிடிக்கும் என்பார்கள். தமிழ் மொழி தான் பிடித்த மொழி என்பார்கள். தேர்தல் இல்லாத போது அவர்களுக்கு தமிழகத்தை பற்றி, எந்த கவனமும் இருக்காது. புலம் பெயரும் பறவைகளைப் போல, தேர்தல் சீசனுக்கு, தமிழகம் வந்து செல்பவர்கள் தான் அவர்கள். தமிழகத்தின் எந்த ஒரு உரிமையையும் தி.மு.க., மற்றும் காங்கிரஸ் கட்சிகள், விட்டுக் கொடுக்காது.
- கார்த்தி
காங்கிரஸ் எம்.பி.,

