ADDED : டிச 14, 2025 03:25 AM

திருவள்ளூர்: திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில் நேற்று நடந்த மாந்தீஸ்வரர் பரிகார பூஜையில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியின் மனைவி ராதா பங்கே ற்றார்.
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியின் மனைவி ராதா, மகன் மிதுன் இருவரும் நேற்று காலை, திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காட்டில் உள்ள வடாரண்யேஸ்வரர் கோவிலுக்கு வந்தனர்.
அங்கு நடைபெற்ற மாந்தீஸ்வரர் பரிகார பூஜையில் அவர்கள் பங்கேற்றனர்.
இந்த கோவிலில், சனிக்கிழமை தோறும் நடைபெறும் மாந்தீஸ்வரர் பரிகார பூஜையில் பங்கேற்றால் சனி தோஷம், ஜென்ம தோஷம் தீரும்; நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பது ஐதீகம். பரிகார பூஜை முடிந்த பின், வடாரண்யேஸ்வரரை அவர்கள் தரிசித்தனர்; 100 பெண்களுக் கு புடவை வழங்கினர்.
பழனிசாமி மீண்டும் முதல்வராக வேண்டும் என்பதற்காக, மாந்தீஸ்வரர் பரிகார பூஜையில் ராதா பங்கேற்றதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே, திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலுக்கு முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா, அவ்வப்போது வந்து செல்வது வழக்கம்.
தற்போது, எதிர்கட்சித் தலைவர் பழனிசாமியின் மனைவி ராதாவும் அதே கோவிலில் பரிகார பூஜையில் பங்கேற்றுள்ளார்.

