தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ பட்டியலின அமைப்புகள் அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு

 பட்டியலின அமைப்புகள் அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு

 பட்டியலின அமைப்புகள் அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு


ADDED : ஏப் 14, 2026 04:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 14, 2026 04:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை, பட்டியலின அமைப்புகளின் நிர்வாகிகள் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

எழுத்தாளர் ஷாலின் மரிய லாரன்ஸ் தலைமையில், தலித் அறிவுசார் குழுமத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் லட்சுமணன், ராமஜெயம், எழுத்தாளர் அருள் முத்துகுமரன், தகவல் உரிமை செயற்பாட்டாளர் கார்த்திக்...

அறிவு சமூகம் அமைப்பின் நிறுவனர் தமிழ்முதல்வன், வணங்காமுடி பதிப்பக நிறுவனர் தமிழ்முரசு, தமிழ்நாடு பறையர் பேரவையைச் சேர்ந்த பேராசிரியர் கதிரவன் ஆகியோர் பழனி சாமியை சந்தித்தனர்.

இது தொடர்பாக, அ.தி.மு.க., தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், 'எழுத்தா ளர் ஷாலின் மரிய லாரன்ஸ் தலைமையில் பட்டியலின அமைப்புகளின் நிர்வாகிகள், பொதுச்செயலர் பழனிசாமியை சந்தித்து, வரும் சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தனர்' என, கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, எழுத்தாளர் ஷாலின் மரிய லாரன்ஸ் கூறியதாவது:

தமிழகத்தில் பட்டியல் சமூக மக்களுக்கான பாதுகாப்பு மற்றும் முன்னேற்றம் குறித்து, பழனிசாமியுடன் கலந்துரையாடினோம்.

வரும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பட்டியல் சமூக பொருளாதார வளர்ச்சி மற்றும் வன் கொடுமை தடுப்பு குறித்து, எங்கள் தரப்பில் இருந்து முக்கிய வழிகாட்டுதல்களை வழங்கினோம்.

இந்திய பெண்கள் அறிவுசார் குழுமம் சார்பாக, பட்டியலின பெண்களுக்கான கோரிக்கைகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை பழனிசாமியிடம் வழங்கினோம்.

அ.தி.மு.க., ஆட்சிக்கு வரும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதால், இந்த சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.

இவ்வாறு அவர் கூறி னார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us