ADDED : டிச 26, 2025 02:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில், தமிழக கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் வாயிலாக, கறவை மாடு வழங்குவதற்கான திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க உறுப்பினர்களில், பயனாளிகளை தேர்ந்தெடுத்து, அதிகபட்சமாக ஒரு பயனாளிக்கு, இரண்டு கறவை மாடுகள் வாங்க, 1.20 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு 7 சதவீத வட்டியுடன், மூன்று ஆண்டுகளுக்குள், பணத்தை திரும்ப செலுத்த வேண்டும்.
விரும்புவோர், ஆவின் மற்றும் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

