sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 ரத்த பரிசோதனை நிலையங்கள் மூடல்; தமிழக அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு

/

 ரத்த பரிசோதனை நிலையங்கள் மூடல்; தமிழக அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு

 ரத்த பரிசோதனை நிலையங்கள் மூடல்; தமிழக அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு

 ரத்த பரிசோதனை நிலையங்கள் மூடல்; தமிழக அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு


UPDATED : டிச 26, 2025 09:00 AM

ADDED : டிச 26, 2025 02:08 AM

Google News

UPDATED : டிச 26, 2025 09:00 AM ADDED : டிச 26, 2025 02:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'சிறிய ரத்த பரிசோதனை நிலையங்களை மூட வழிவகுக்கும், தமிழக அரசின் நடவடிக்கையை கண்டித்து, பிப்.,15ல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும்' என, 'பாரா மெடிக்கல் லேப்' கல்வி மற்றும் நலச்சங்கம் அறிவித்துள்ளது.

அதன் தலைவர் காளிதாசன் வெளியிட்ட அறிக்கை:

மத்திய அரசு, அடிப்படை ரத்த பரிசோதனை நிலையங்கள் செயல்பட, எந்தவித குறைந்தபட்ச இட நிர்ணயத்தையும் அறிவிக்கவில்லை.

ஆனால், தமிழக அரசு, ரத்த பரிசோதனை, எக்ஸ்ரே, மற்றும் பிற பரிசோதனை நிலையங்கள் செயல்பட, தேவையான இடவசதி குறித்து, அரசாணை 390ல் தெரிவித்துள்ளது.

அதன்படி, நகர்ப்புறத்தில் 500 முதல் 700 சதுர அடி; கிராமப்புறத்தில் 300 சதுர அடி பரப்பளவு இடம் இருக்க வேண்டும்.

ஆனால், தமிழகத்தில் ஏற்கனவே உள்ள ரத்த பரிசோதனை நிலையங்கள் பெரும்பாலும், 100 சதுர அடிக்கு குறைவான இடங்களில் உள்ளன.

மேலும், 'எக்ஸ்ரே, 'சிடி ஸ்கேன்' போன்ற பரிசோதனை நிலையங்கள், குறைந்த அளவில் தான் உள்ளன. 80 சதவீதத்திற்கு மேல் ரத்த பரிசோதனை மையங்கள், குறைந்த அளவு இடத்தில் தான் இயங்கி வருகின்றன.

ஆய்வக நுட்புனர் படித்துவிட்டு வேலை கிடைக்காமல் இருப்பவர்கள், சிறிய அளவிலான ரத்தப் பரிசோதனை மையங்களை நடத்தி வருகின்றனர்.

குறைந்த கட்டணத்தில், ஏழை மக்களுக்கு சர்க்கரை பரிசோதனை உள்ளிட்டவற்றை செய்து வருகின்றனர். அரசின் நடவடிக்கையால், சிறிய அளவிலான ரத்தப் பரிசோதனை நிலையங்கள், மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

எனவே, இந்த அரசாணையை திரும்பப் பெற வலியுறுத்தி, வரும் பிப்., 15ம் தேதி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us