எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்கள் பெற்ற கடன் ரூ.49 கோடி ரத்து
எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்கள் பெற்ற கடன் ரூ.49 கோடி ரத்து
ADDED : பிப் 04, 2025 03:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்துவ ஆதிதிராவிட மாணவர்களுக்கு, 1972- - 73 முதல் 2002- - 2003ம் கல்வியாண்டு வரையிலும், 2009 - 2010 காலகட்டத்திலும், மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளுக்கு வழங்கப்பட்ட கல்வி கடன்களில், 48.95 கோடி ரூபாய் நிலுவை தொகையை வசூலிக்க இயலவில்லை.
மாணவர் பதிவேடுகள் உள்ளிட்ட ஆவணங்கள், அலுவலகங்களில் இல்லாததால், வசூலிக்க வேண்டிய நபர்களை அடையாளம் காண இயலவில்லை.
இதனால், அந்த தொகை முழுதையும் சிறப்பினமாக கருதி தள்ளுபடி செய்து, அரசு உத்தரவிட்டுள்ளது.

