ADDED : டிச 16, 2024 01:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தேசிய அளவில் மக்கள் நீதிமன்றம் எனப்படும், லோக் அதாலத் நேற்று முன்தினம் நடந்தது. தமிழகத்தில், மாவட்டம் மற்றும் தாலுகா அளவில், 479 அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டன.
சென்னை உயர் நீதிமன்றத்தில், நீதிபதிகள் சுந்தர் மோகன், பி.பி.பாலாஜி, ஜி.அருள்முருகன், எம்.ஜோதிராமன் மற்றும் ஓய்வுபெற்ற நீதிபதிகள் எஸ்.கே.கிருஷ்ணன், ஜி.சொக்கலிங்கம், எம்.ஜெயபால், பி.கோகுல்தாஸ்.
உயர் நீதிமன்ற மதுரை கிளையில், நீதிபதிகள் ஆர்.கலைமதி, பி.வடமலை, என்.செந்தில்குமார், ஆர்.பூர்ணிமா ஆகியோர் தலைமையிலும் லோக் அதாலத் நடந்தது.
தமிழகம் முழுதும் நடந்த லோக் அதாலத்தில், 82,257 வழக்குகளில், 576.32 கோடி ரூபாய் அளவுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

