மதுரையில் அமித்ஷாவின் ரோடு ஷோ : தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
மதுரையில் அமித்ஷாவின் ரோடு ஷோ : தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
UPDATED : ஏப் 12, 2024 07:43 PM
ADDED : ஏப் 12, 2024 07:22 PM

மதுரை: மதுரை தொகுதி பா.ஜ.,எம்.பி.,யை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ரோடு ஷோ நடத்தினார்.
வருகிற 19 -ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. முதற்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்களின் பிரசாரம் மாநிலம் மற்றும் நாடு முழுவதும் சூடு பிடித்து வருகிறது. இந்நிலையில் மதுரை எம்.பி.,தொகுதிக்கு பா.ஜ.,வை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மதுரை வந்தார். அவர் மதுரை நேதாஜி சாலையில் உள்ள தண்டாயுதபாணி முருகன் கோவில் இருந்து ரோடு ஷோவை துவக்கினார். வாகனப் பேரணி ஆவணி மூல வீதி வழியாக விளக்குதூணில் நிறைவடைந்தது.
ரோடு ஷோ துவங்கியது முதல் சாலையில் இருபுறமும் ஏராளமான பொது மக்கள் மற்றும் பா.ஜ.,வினர் அமித்ஷாவை வரவேற்றனர். கொடிகளை ஏந்தியவாறு உற்சாகத்துடன் கையசைக்கும் தொண்டர்களிடம் தாமரை சின்னத்தை காண்பித்தார் அமித்ஷா, தொண்டர்கள் தந்த தாமரை மாலை மற்றும் தொப்பியை வேட்பாளர் ராம சீனிவானனுக்கு அணிவித்தார்.
அமித்ஷாவுக்கு மதுரை ஆதினம் பொன்னாடை
அமித்ஷா,மதரை ஆதினத்தை பார்த்ததும் வாகனத்தை நிறுத்தினார். அதை தொடர்ந்து அமித்ஷாவிற்கு மாலை மற்றும் பொன்னாடை வழங்கி நினைவு பரிசு வழங்கினார் மதுரை ஆதினம்.
ரோடு ஷோ நிறைவில் தமிழக வளர்ச்சி நலனில் அக்கறை செலுத்தும் கட்சி பா.ஜ.க., தமிழக மக்கள் பிரதமர் மோடிக்கு வாக்களிக்க தயாராகிவிட்டனர். இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.

