sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

காலியான சேர்களை பார்த்து பேசிய ரஜினி: கலைஞர் நூற்றாண்டு விழாவில் சொதப்பல்

/

காலியான சேர்களை பார்த்து பேசிய ரஜினி: கலைஞர் நூற்றாண்டு விழாவில் சொதப்பல்

காலியான சேர்களை பார்த்து பேசிய ரஜினி: கலைஞர் நூற்றாண்டு விழாவில் சொதப்பல்

காலியான சேர்களை பார்த்து பேசிய ரஜினி: கலைஞர் நூற்றாண்டு விழாவில் சொதப்பல்

106


UPDATED : ஜன 07, 2024 02:25 PM

ADDED : ஜன 07, 2024 02:24 PM

Google News

UPDATED : ஜன 07, 2024 02:25 PM ADDED : ஜன 07, 2024 02:24 PM

106


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட ‛கலைஞர் 100' நிகழ்ச்சியில் ரசிகர்கள் குறைவாகவே பங்கேற்றனர். குறிப்பாக முக்கிய நடிகரான ரஜினி பேசும்போது கூட காலி இருக்கைகளே தென்பட்டன. இந்த வீடியோ வைரலாகியுள்ளது.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ் திரையுலகம் சார்பில் ‛கலைஞர் 100' என்ற பிரமாண்ட கலை நிகழ்ச்சி சென்னையில் உள்ள கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நேற்று (ஜன.,6) நடைபெற்றது. இதில் எதிர்பார்த்த அளவு கூட்டமே இல்லாததால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அவ்வளவு பெரிய மைதானத்தில் ஆங்காங்கே மட்டும் சிலர் அமர்ந்திருந்தனர்.

நடிகர்கள் ரஜினி, கமல், சூர்யா, தனுஷ் தவிர மற்ற பெரிய நடிகர்கள் யாரும் விழாவில் கலந்துகொள்ளவில்லை. மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி திரையுலகிலும் முன்னணி நடிகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டும், கன்னட நடிகர் சிவராஜ் குமார் தவிர யாருமே வரவில்லை. முன்னணி இசையமைப்பாளர்களான ஏ.ஆர்.ரஹ்மான், இளையராஜாவும் வரவில்லை. எதிர்பார்த்த அளவிற்கு மக்களும், திரைப்பிரபலங்களும் வராமல் சொதப்பல் நிகழ்ச்சியாக மாறியதற்கு சரியான திட்டமிடல் இல்லாததே காரணம் எனக் சொல்லப்படுகிறது.

Image 1216623ரசிகர்கள் பொறுமை இழக்கும் அளவிற்கு நிகழ்ச்சி ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பொதுவாக நடிகர் ரஜினி பேசும்போது ஒட்டுமொத்த அரங்கமும் அதிரும் அளவிற்கு ரசிகர்கள் ஆரவாரம் எழுப்புவார்கள். ஆனால் இம்முறை ரஜினி பேசும்போது முழுவதும் நிசப்தமே நீடித்தது. காலி இருக்கைகளுக்கு முன்பு மேடையில் ரஜினி பேசுகையில் சொற்ப எண்ணிக்கையிலான ரசிகர்களே கவனித்தனர். அந்த அளவிற்கு ரசிகர்களின் வருகையும் குறைவாக இருந்தது. ‛கலைஞர் 100' நிகழ்ச்சி சிறப்பாக அமையவில்லை என்பதே உண்மை.






      Dinamalar
      Follow us