ராமேஸ்வரம் வந்தடைந்தார் பிரதமர் மோடி: வரவேற்ற கவர்னர், அமைச்சர்கள்
ராமேஸ்வரம் வந்தடைந்தார் பிரதமர் மோடி: வரவேற்ற கவர்னர், அமைச்சர்கள்
UPDATED : ஏப் 06, 2025 04:40 PM
ADDED : ஏப் 06, 2025 07:24 AM

ராமேஸ்வரம்: இலங்கை பயணத்தை வெற்றிக்கரமாக முடித்துவிட்டு, பிரதமர் மோடி ராமேஸ்வரம் வந்தடைந்தார்.
அவரை கவர்னர் ரவி, மத்திய அமைச்சர் முருகன், மாநில அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராஜ கண்ணப்பன், ராமநாதபுரம் எம்.பி., நவாஸ் கனி, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, தமிழிசை சவுந்திரராஜன்,பா.ஜ., எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகியோர் வரவேற்றனர்.
இலங்கையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் புறப்பட்டார். அவரை இலங்கை அதிகாரிகள் விமான நிலையத்தில் வழியனுப்பி வைத்தனர்.
ராம நவமி நாளான இன்று, மதியம் 1 மணியளவில், ராமேஸ்வரத்தில் இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு கடல் பாலமான புதிய பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
காத்திருக்கிறேன்
முன்னதாக, சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: அனைவருக்கும் ராம நவமி வாழ்த்துக்கள். பிரபு ஸ்ரீ ராமரின் ஆசீர்வாதம் எப்போதும் நம் மீது நிலைத்திருக்கட்டும்.
நமது அனைத்து முயற்சிகளிலும் நம்மை வழிநடத்தும். இன்று ராமேஸ்வரம் வருவதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.