ADDED : ஆக 22, 2025 01:14 AM
பச்சாம்பாளையம்:சாலையோரம் நின்ற லாரி மீது ஆம்னி வேன் மோதியதில் மூன்று பேர் பலியாகினர்.
சேலம் மாவட்டம், வேம்படிதாளம், மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சுகுமார், 49; பட்டு நெசவு தொழில் செய்து வந்தார்.
இவரது தாய் கமலா, 74, உறவினர் மோகன், 54, சுகுமார் மனைவி சுசீலா, 45, உறவினர் புவனேஸ்வரி என, ஐந்து பேர், ஈரோடு மாவட்டம், பவானி கூடுதுறை கோயிலுக்கு ஆம்னி வேனில் நேற்று காலை சென்றனர்.
தரிசனம் முடிந்து மதியம், 12:45 மணிக்கு வீடு திரும்பினர். வேனை சுகுமார் ஓட்டினார்.
சங்ககிரி அருகே பச்சாம்பாளையம் வந்த போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர பேக்கரி முன் நின்ற லாரி பின்னால் ஆம்னி வேன் பயங்கரமாக மோதியது. இதில், முன்பகுதி முழுமையாக சேதமடைந்தது. சுகுமார், கமலா, மோகன் சம்பவ இடத்திலேயே பலியாகினர். சுசீலா, புவனேஸ்வரி படுகாயமடைந்தனர்.
வெப்படை போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், சுகுமார் துாக்க கலக்கத்தில் இருந்த தால் விபத்து நடந்தது தெரிய வந்தது.

