sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அன்பு மழையிலே... கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்

/

அன்பு மழையிலே... கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்

அன்பு மழையிலே... கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்

அன்பு மழையிலே... கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்


ADDED : டிச 24, 2024 07:13 PM

Google News

ADDED : டிச 24, 2024 07:13 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பிறந்தார் இயேசு


ரோமப் பேரரசர் ஏரோதுவின் ஆட்சியின் போது வானில் அதிசய நட்சத்திரத்தைக் கண்டார்கள் தீர்க்கதரிசிகள். இம்மண்ணில் ஒரு தேவகுமாரன் பிறக்க போகிறான் என அவர்கள் உணர்ந்தனர். அப்போது மரியாளின் முன் தோன்றிய தேவதுாதர் கபிரியேல், 'உனக்கு ஆண்டவர் அருளால் ஒரு மகன் பிறப்பான்' என முன் அறிவிப்பு செய்தார். அதன்படியே இயேசு பிறந்தார்.

முதல் வாழ்த்து


* கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டையை 1843ல் முதன் முதலில் அனுப்பியவர் லண்டனைச் சேர்ந்த ெஹன்றி கோல். இந்த வாழ்த்து அட்டையை ஓவியர் ஹார்ஸ்லே வடிவமைத்தார். * பிலிப்பைன்சில் கிறிஸ்துமஸ் அன்று அதிகாலை 4:00 மணிக்கு முதன்மை சர்ச்சில் இருந்து மணி ஒலித்தவுடன், மற்ற சர்ச்சுகளில் மணி ஒலிக்கும். இதன் பின்னரே கொண்டாட்டம் தொடங்கும். * கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் என்ற சொல் 16ம் நுாற்றாண்டில் உருவானது. அதற்கு முன் இதை கர்த்தர் கொண்டாட்டம் என அழைத்தனர்.

கொடி பறக்குது


நடுக்கடலில் புயலில் சிக்கினர் போர்ச்சுக்கீசிய மாலுமிகள். அவர்களின் வேண்டுதலுக்கு இணங்கி நாகப்பட்டினம் வேளாங்கண்ணி கரையோரமாக கரை சேர்த்தாள் அன்னை மரியாள். அதற்கு நன்றியாக கரையில் இருந்த சிறிய தேவாலயத்தை பெரியதாக கட்டிக் கொடுத்தனர் மாலுமிகள். கப்பலில் இருந்த பாய்மரத் துாணையே கொடிமரமாக நட்டனர். அதில் தான் இன்றும் கொடி பறக்கிறது.

புனிதர் பட்டம்


புனிதர் பட்டம் பெற இறை ஊழியர், வணக்கத்திற்குரியவர், அருளாளர் என்னும் மூன்று நிலைகளை கடக்க வேண்டும்.

ஆண்டவர் வகுத்த கொள்கைகளில் தீவிர நம்பிக்கையும், அர்ப்பணிப்பு உணர்வும் இவருக்கு அவசியம்.

வணக்கத்திற்குரியவர் என்பது கிறிஸ்தவ சான்றோருக்கு வழங்கப்படும் பட்டம். இறை ஊழியரின் இறப்புக்குப் பின் அவரின் நல்வாழ்வை ஆராய்ந்த பின் இது அளிக்கப்படும்.

அருளாளர் பட்டம் என்பது இறை ஊழியராக வாழ்ந்த ஒருவர் விண்ணகத்தில் இருக்கிறார் என்றும், ஆண்டவரிடம் பரிந்து பேசும் ஆற்றல் பெற்றவர் என்றும் கத்தோலிக்க சபையினரால் வழங்கப்படும் அங்கீகாரம்.

அருளாளராக வாழும் ஒருவரை அங்கீகரிக்கப்பட்டவர் பட்டியலில் சேர்க்கும் நிகழ்வு புனிதர் பட்டம்.

மன்னிக்க வேண்டுகிறேன்


சிலுவையில் அறையப்பட்டாலும் இயேசு அதற்காக வருந்தவில்லை. தண்டனை அளித்தவர்களுக்காக பிரார்த்தனை செய்தார். ''பிதாவே... அறியாமல் பாவம் செய்த இவர்களை மன்னிக்க வேண்டுகிறேன்'' என்றார். ரட்சண்ய யாத்திரிகம் என்ற நுால் இது பற்றி கூறியுள்ளது.

தன்னரிய திருமேனி சதைப்புண்டு தவிப்பெய்திப்பன்னரிய பலபாடு படும் போதும் பரிந்தெந்தாய்இன்னதென அறிகில்லார் தாம் செய்வ திவர்பிழையைமன்னியும் என்றெழில் கனிவாய் மலர்ந்தார் நம் அருள்வள்ளல்.

பாவ மன்னிப்பு


ஆதாம், ஏவாளை படைத்தவர் ஆண்டவர். பின்பு அவர்கள் மூலம் சேத், ஏனோஸ், கேனான், மகலாலேயல், யாரேத், ஏனோக், மேத்துாசலா, லாமேக், நோவா, சேம், அர்பக்தசாத், சாலா, ஏபேர், பேலேகு, ரெகு, செருக், நாகோர், தேரா, ஆபிரகாம் வரை 20 தலைமுறைகள் உருவாயினர். இவர்கள் ஆடு, மாடு, பறவைகளை பலியிட்டு தங்களின் பாவத்திற்கு மன்னிப்பு கோரினர். அவர்களை பாவத்தில் இருந்து மீட்க இயேசு பிறந்தார்.

ஒரு முறையாவது பார்


ஜெருசலம் அருகிலுள்ள பெத்லகேமில் ஒரு மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார் இயேசு. அவர் நினைவாக இந்நகரில் பல சர்ச்சுகள் கட்டப்பட்டன.அவர் பிறந்த தொழுவத்தின் மீது 'சர்ச் ஆப் நேட்டிவிட்டி' என்னும் சர்ச் கட்டப்பட்டுள்ளது. வாழ்நாளில் ஒரு முறையாவது கிறிஸ்தவர்கள் இதைப் பார்க்க வேண்டும்.

பளபளக்கும் தொப்பி


கிறிஸ்துமஸ்காக வீட்டு வாசலில் நட்சத்திர விளக்குகளை வைப்பது வழக்கம். ஸ்வீடன் நாட்டில் வெள்ளியால் ஆன நட்சத்திரங்களை தொப்பிகளில் ஒட்டிக் கொள்வர். இது இரவு நேரத்திலும் பளபளப்பாக மின்னும்

உங்களுக்கு தெரியுமா...


* இயேசு 33 ஆண்டுகள் பூமியில் வாழ்ந்தார்.

* 300 ஆண்டுகள் கழித்தே ரோம பேரரசு அவரை ஆண்டவராக ஏற்றது.

* பைபிளை தமிழில் ஜெர்மன் அறிஞர் சீகன் பால்கு மொழிபெயர்த்தார்.

* 24,000 கையெழுத்து பிரதிகள் பைபிளுக்கு உள்ளன.

* நியூயார்க் இறையியல் கல்லுாரியில் முதன் முதலில் அச்சடித்த பைபிள் உள்ளது.






      Dinamalar
      Follow us