உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : ஆக 13, 2026 05:46 AM
அ நிறம் | அளவு
சென்னை: சட்டசபையில் நடந்த விவாதம்:
நிதியமைச்சர் மரிய வில்சன்: பொய் சொல்லாமல், நேர்மையாக இருந்தால் வெற்றி பெறலாம் என்பதற்கு முதல்வர் விஜய் உதாரணம்.
சபாநாயகர் பிரபாகர்: சட்டசபையில் 'பொய்' என்ற சொல்லை பயன்படுத்தக் கூடாது. அதற்கு பதிலாக, 'உண்மைக்கு மாறாக' என, மாற்றி பேசவும்.
தி.மு.க., தங்கம் தென்னரசு: சட்டசபை யில் ஒருவரை குறிப் பிட்டு, அவர் பொய் சொல்கிறார் என்று தான் சொல்லக் கூடாதே தவிர, 'பொய்' என்ற சொல்லையே பயன்படுத்தக் கூடாது என்பதல்ல.
அப்படியெனில், 'பொய்யாமை' எனத் தொடங்கும் திருக்குறளை, இங்கே சொல்ல முடியாது.
நிதியமைச்சர் மரிய வில்சன்: தங்கம் தென்னரசுக்கு நன்றி.
அ.தி.மு.க., பழனிசாமி: சட்டசபையில் 'பொய்' என்ற சொல்லை பயன்படுத்தக் கூடாது என்பது மரபாக இருந்து வருகிறது; அதையே பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
