sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

"மங்கள்யான்' செயற்கைகோள் திட்ட இயக்குநர் நெல்லையை சேர்ந்த கிராமத்து விஞ்ஞானி

/

"மங்கள்யான்' செயற்கைகோள் திட்ட இயக்குநர் நெல்லையை சேர்ந்த கிராமத்து விஞ்ஞானி

"மங்கள்யான்' செயற்கைகோள் திட்ட இயக்குநர் நெல்லையை சேர்ந்த கிராமத்து விஞ்ஞானி

"மங்கள்யான்' செயற்கைகோள் திட்ட இயக்குநர் நெல்லையை சேர்ந்த கிராமத்து விஞ்ஞானி


UPDATED : நவ 08, 2013 12:57 AM

ADDED : நவ 06, 2013 11:54 PM

Google News

UPDATED : நவ 08, 2013 12:57 AM ADDED : நவ 06, 2013 11:54 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி:செவ்வாய்க் கிரகத்தை ஆராய, விண்ணில் ஏவப்பட்டுள்ள 'மங்கள்யான்' செயற்கைகோள் பணியின், திட்ட இயக்குநராக நெல்லையை சேர்ந்த விஞ்ஞானி சுப்பையா அருணன் பணியாற்றியுள்ளது, சொந்த ஊர் மக்களுக்கு பெருமையாக உள்ளது.

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நேற்றுமுன்தினம் விண்ணில் ஏவப்பட்ட 'மங்கள்யான்' செயற்கைகோள் தயாரிப்பில், முக்கிய பங்காற்றியவர் சுப்பையா அருணன்,55. இவர், நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள கோதைசேரி கிராமத்தை சேர்ந்தவர். இவரது தந்தை சுப்பையா, ஏர்வாடி, வள்ளியூர், கூடங்குளம் பள்ளிகளில் தலைமையாசிரியராக பணியாற்றியுள்ளார். இவரது தாயார் மாணிக்கம் அம்மாள்.அருணன், திருக்குறுங்குடி பள்ளியிலும், பாளையங்கோட்டை சேவியர் பள்ளியில் பயின்றுள்ளார். பின்னர், கோவை கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டம் பெற்றார். 1984 ல் திருவனந்தபுரம் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பணியை துவக்கினார். தற்போது, பெங்களூரில் உள்ள இஸ்ரோ மையத்தில் பணிபுரிகிறார்.

திருவனந்தபுரம் ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றிய விஞ்ஞானி நம்பி நாராயணன்,80, என்பவரது மூத்த சகோதரியின் மகன் தான் அருணன். 1994 ல், விண்வெளி ரகசியங்களை மாலத்தீவு பெண்களுக்கு கொடுத்ததாக, நம்பி நாராயணன் கைதானார். பின்னர், அந்த குற்றச்சாட்டு பொய் என நிரூபிக்கப்பட்டு, அதற்காக, நம்பி நாராயணனிடம் அதிகாரிகள் மன்னிப்பு கேட்டனர்.நம்பி நாராயணனின் மகள் கீதாவை தான், சுப்பையா அருணன் திருமணம் செய்துள்ளார். இவர்கள், தற்போது குடும்பத்துடன் பெங்களூருவில் வசிக்கின்றனர். கீதா பள்ளி ஆசிரியையாக உள்ளார். அருணனின் அண்ணன் நல்லமுத்து வனவிலங்கு புகைப்பட கலைஞராகவும், தம்பி குமரன் சென்னையில் சினிமா இசை அமைப்பாளராகவும் உள்ளனர்.

மேலும், அவருக்கு பாரிவள்ளல், லதா சங்கரி என சகோதர, சகோதரிகள் உள்ளனர். அருணன் குடும்பத்தினர், 15 ஆண்டுகளுக்கு முன்பே சொந்த ஊரை விட்டு வெளியேறிவிட்டாலும், பள்ளி தலைமையாசிரியரின் மகன் என்ற முறையில், விஞ்ஞானி அருணனை கோதைசேரி கிராம மக்கள் தெரிந்து வைத்துள்ளனர். நெல்லை மாவட்டம் வள்ளியூரில், அவரது நண்பர்கள், பிளக்ஸ் போர்டு வைத்து, தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.






      Dinamalar
      Follow us