ADDED : டிச 22, 2025 02:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்: மா.கம்யூ., மாநில செயலர் சண்முகம் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அளித்த பேட்டி:
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியில், 97.38 லட்சம் பேர் நீக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இறந்து போனவர்கள், 26 லட்சம் பேர் என கூறுவது, நம்பும்படி இல்லை.
அனைவருக்கும் ஓட்டுரிமை வழங்க வேண்டிய தேர்தல் கமிஷன், வாக்காளர்களை நீக்குவதில் ஆர்வம் காட்டி உள்ளது. தீவிர திருத்தப் பணிகளை இத்துடன் நிறுத்த வேண்டும். இது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், விசாரணை முடிந்து, தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் அதிக தொகுதிகளை கேட்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.

