தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ மடப்புரம் அஜித்குமார் மரணம் டி.எஸ்.பி.,யை ஆஜர்படுத்த உத்தரவு

 மடப்புரம் அஜித்குமார் மரணம் டி.எஸ்.பி.,யை ஆஜர்படுத்த உத்தரவு

 மடப்புரம் அஜித்குமார் மரணம் டி.எஸ்.பி.,யை ஆஜர்படுத்த உத்தரவு


ADDED : பிப் 27, 2026 05:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 27, 2026 05:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத டி.எஸ்.பி.,க்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் அவரை பிடித்து சி.பி.ஐ., அதிகாரிகள் ஆஜர்படுத்த மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.

அக்கோயிலுக்கு வந்த பேராசிரியை நிகிதா காரிலிருந்த நகை திருடுபோனதாக திருப்புவனம் போலீசில் புகார் செய்தார். கோயில் காவலாளியாக இருந்த அஜித்குமாரை 2025 ஜூன் 27ல் போலீசார் விசாரித்தனர். தனிப்படை போலீசார் தாக்கியதில் அவர் இறந்தார். இவ்வழக்கை சி.பி.ஐ.,விசாரிக்கிறது. கண்ணன் உள்ளிட்ட 6 போலீசார் கைதாகினர்.

மானாமதுரை டி.எஸ்.பி., சண்முக சுந்தரம், திருப்புவனம் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார், சிறப்பு எஸ்.ஐ.,சிவக்குமார், ஏட்டு இளையராஜா கூடுதல் எதிரிகளாக குற்றப்பத்திரிகையில்சேர்க்கப்பட்டனர்.

இவர்கள் பிப்.25ல் ஆஜராக மதுரை தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி செல்வபாண்டி பிப்.11 ல் உத்தரவிட்டார். நேற்று முன்தினம் அந்நீதிமன்ற நீதிபதி விடுமுறை என்பதால் கூடுதல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி அசன்முகமது விசாரித்தார்.

ரமேஷ்குமார், சிவக்குமார், இளையராஜா ஆஜராகினர்.

நீதிபதி, 'டி.எஸ்.பி., ஆஜராகாததால் அவருக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரன்ட் பிறப்பிக்கப்படுகிறது,' என உத்தரவிட்டு ஒத்திவைத்தார். நேற்று தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி செல்வபாண்டி விசாரித்தார். ரமேஷ்குமார் உள்ளிட்ட 3 பேர் ஆஜராகினர். டி.எஸ்.பி.,ஆஜராகவில்லை.

நீதிபதி பிறப்பித்த உத்தரவு: டி.எஸ்.பி.,யை பிடித்து சி.பி.ஐ.,அதிகாரிகள் இந் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும். விசாரணை மார்ச் 5க்கு ஒத்திவைக்கப்படுகிறது என் றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us