தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ மதுரை- சினிமா- 23.09

 மதுரை- சினிமா- 23.09

 மதுரை- சினிமா- 23.09


ADDED : செப் 22, 2026 09:16 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 22, 2026 09:16 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கின்னஸ் சாதனை படைத்த 'ராக்கா'

அல்லு அர்ஜூன், தீபிகா படுகோனேவை வைத்து 'ராக்கா' படத்தை இயக்குகிறார் அட்லி. சூப்பர் ஹீரோ மாதிரியான சயின்ஸ் பிக் ஷன் கதையில் பிரமாண்டமாய் உருவாகிறது. இந்த படம் கின்னஸ் சாதனை படைத்துள்ளது. 37 கலைஞர்களை வைத்து ஒரே நேரத்தில் 'மோஷன் கேப்சரிங்' தொழில்நுட்பத்தில் படப் பிடிப்பு நடத்தியதற்காக இந்த கவுரவம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான சான்றிதழை அல்லு அர்ஜூன், அட்லி பெற்றனர்.

பிரபாஸின் 'பௌசி' வெளியீடு தள்ளிவைப்பு

ஹனு ராகவப்புடி இயக்கத்தில் பிரபாஸ், இமான்வி நடிப்பில் உருவாகும் படம் 'பெளசி'. முக்கிய வேடத்தில் அனுபம் கெர், மிதுன் சக்கர வர்த்தி நடிக்கின்றனர். டிச.3ல் ரிலீஸ் என அறிவித்த நிலையில் இதன் தயாரிப்பாளர் கூறுகையில், ''பட தயாரிப்பு பணிகள் தாமதமாவதால் வெளியீட்டை தள்ளி வைக்கிறோம். பாகுபலி படத்திற்கு பின் இப்படியொரு தோற்றத்தில் பிரபாஸை பார்த்திருக்க மாட்டீர்கள். வாழ்நாள் முழுக்க இந்த படத்தை கொண்டாடுவீர்கள்'' என்றார்.

மஹாவீர் கர்ணனாக ராகவா லாரன்ஸ்

காஞ்சனா 4, பென்ஸ் ஆகிய படங்களில் நடிக்கும் ராகவா லாரன்ஸ் அடுத்து 'மஹாவீர் கர்ணா' என்ற சரித்திர படத்தில் கர்ணனாக நடிக்கிறார். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் தயாராகும் இதை ரமேஷ் வர்மா இயக்குகிறார். ராகவா கூறுகையில் ''கர்ணன் வேடத்தில் நடிப்பது மகிழ்ச்சி. இந்த கதை என்னை வந்தடையும் என்று எதிர்பார்க்கவில்லை. இயக்குனருக்கு நன்றி'' என்றார். அடுத்தாண்டு படம் ரிலீஸ் என போஸ்டரில் குறிப்பிட்டுள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் இளையராஜாவுக்கு கவுரவம்

இசையமைப்பாளர் இளையராஜா இப்போது ஆஸ்ரேலியாவில் இசை சுற்று பயணத்தில் உள்ளார். இவரின் 50 ஆண்டு இசைப் பயணத்தை பாராட்டி கவுரவிக்கும் வகையில் ஆஸ்திரேலியாவில் சிறப்பு தபால் தலை வெளியிடப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய பார்லிமென்ட்டில் அந்நாட்டு அமைச்சர் வெளியிட இளையராஜா பெற்றுக் கொண்டார்.

விவாகரத்து அதிகரிப்பது ஏன்... - காஜல் ஓபன் டாக்

நடிகை காஜல் அகர்வால் அளித்த பேட்டியில், ''சகிப்புத்தன்மையின்மை மற்றும் அளவுக்கு அதிகமான சமூக வலைதள பயன்பாடே அதிகரித்து வரும் விவாகரத்துக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக இருக்கிறது. பல தம்பதிகள் உணவகங்களுக்கு செல்லும்போது கூட ஒருவருக்கொருவர் பேசுவதை விட தங்கள் அலைபேசியிலேயே அதிக நேரம் செலவிடுகின்றனர். இதனால் தம்பதியரின் கவனம் திசை திருப்பப்படுவதால் அர்த்தமுள்ள உரையாடல்கள் படிப்படியாகக் குறைகின்றன'' என தெரிவித்துள்ளார். இவரது கருத்திற்கு பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us