தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ சர்லபள்ளி- - செங்கோட்டை வாராந்திர சிறப்பு ரயில்

 சர்லபள்ளி- - செங்கோட்டை வாராந்திர சிறப்பு ரயில்

 சர்லபள்ளி- - செங்கோட்டை வாராந்திர சிறப்பு ரயில்


ADDED : செப் 22, 2026 09:17 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 22, 2026 09:17 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: பண்டிகை காலத்தை முன்னிட்டு ஆன்மிக தலங்களான திருப்பதி, பழநி, மதுரையை இணைக்கும் வகையில் தெலங்கானா மாநிலம் சர்லபள்ளி-- - செங்கோட்டை இடையே வாராந்திர சிறப்பு ரயிலை தென்மத்திய ரயில்வே அறிவித்துள்ளது.

அக்.2 முதல் நவ.27 வரை (வெள்ளி தோறும்) காலை 7:15 மணிக்கு சர்லபள்ளியில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (07191), மறுநாள் மதியம் 2:00 மணிக்கு செங்கோட்டை செல்கிறது. மறுமார்க்கத்தில் அக்.3 முதல் நவ.28 வரை (சனி தோறும்) மாலை 5:40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (07192), திங்கள் அதிகாலை 12:30 மணிக்கு சர்லபள்ளி செல்கிறது.

தென்காசி, கடையநல்லுார், சங்கரன்கோவில், ராஜபாளையம்,ஸ்ரீவில்லிபுத்துார், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழநி, உடுமலைப்பேட் டை, பொள்ளாச்சி, போத்தனுார், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, நெல்லுார், குண்டூர் வழியாக செல்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us