தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ஊதிய உயர்வு வலியுறுத்தல்

ஊதிய உயர்வு வலியுறுத்தல்

ஊதிய உயர்வு வலியுறுத்தல்


ADDED : செப் 22, 2026 07:33 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 22, 2026 07:33 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: தமிழ்நாடு உழவர் சந்தை பாதுகாவலர் மற்றும் துப்புரவுப் பணியாளர்கள் நலச்சங்க மாநில தலைவர் மாரிமுத்து கூறியிருப்பதாவது: தமிழகத்தில் முதல் உழவர் சந்தை 1999 ல் மதுரை அண்ணாநகரில் தொடங்கப்பட்டது. மாநிலம் முழுவதும் 181 உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகிறது.

ஒவ்வொரு சந்தையிலும் 3 காவலர்கள், 1 துப்புரவுப் பணியாளர்கள் வீதம் 25 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. இவர்களை ஒப்பந்த அடிப்படையில் இருந்து மாற்றி பணிநிரந்தரம் அல்லது தினக்கூலி அடிப்படையில் ஊதியம் வழங்கல் அல்லது இன்றைய பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு ஊதிய உயர்வு வழங்க வேண்டும். ஆண்டில் 365 நாளும் பணியாற்றும் எங்களுக்கு பண்டிகை காலங்களில் அரசின் ஊக்கத் தொகையும் கிடைப்பதில்லை. வரும்காலத்திலாவது வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us