ADDED : மார் 07, 2026 05:48 AM
'யூத்'-ல் நடிக்க மறுத்த நடிகைகள்: கென் கருணாஸ்
நடிகர் கருணாஸின் மகன் கென், 'யூத்' படத்தின் மூலம் நாயகனாகவும், இயக்குனராகவும் அறிமுகமாகிறார். 'சிறை' படத்தில் நடித்த அனிஷா நாயகியாக நடிக்கிறார்.
கென் கூறுகையில் ''படத்தின் ஸ்கிரிப்டை பல நடிகைகளிடம் கூறினேன். கதை பிடித்திருப்பதாக சொன்னாலும் பலர் நடிக்க மறுத்தனர். மெசேஜ்க்கு பதில் கூட சிலர் சொல்லவில்லை. ஆனால் இப்போது படத்தின் பாடல்களுக்கு அவர்களே ரீல்ஸ் வெளியிட்டு புரமோட் செய்கின்றனர்'' என்றார்.
முனீஷ்காந்தின் நிறைவேறாத ஆசை
காமெடி நடிகராக நடித்து வரும் முனீஷ்காந்த், விமலின் 'வடம்' படத்தில் நெகட்டிவ் கலந்த ரோலில் நடித்துள்ளார். இதுபற்றி பேசிய முனீஷ்காந்த், ''சினிமாவிற்கு வந்து 12 ஆண்டுகள் ஆகிறது. முண்டாசுபட்டி படத்தில் வில்லன் கேரக்டர் கேட்டு ஆடிசனுக்கு போனேன். ஆனால் இயக்குனர் என்னை காமெடி நடிகனாக்கினார். அது அப்படியே தொடர்கிறது. என்றாலும், முழுமையான ஒரு வில்லனாக நடிக்க வேண்டும் என்கிற ஆசை இருந்து கொண்டே இருக்கிறது'' என்றார்.
மீண்டும் சிரஞ்சீவி படத்திற்கு தமன் இசை
நடிகர் சிரஞ்சீவியின் 158வது படத்தை பாபி கொல்லி என்பவர் இயக்கவுள்ளார். இதன் முன் தயாரிப்பு பணிகள் நடந்து வரும் நிலையில், படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பதாக முதலில் தகவல் பரவியது. ஆனால் தற்போது தமன் தான் இசையமைக்க உள்ளதாக விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளனர். ஏற்கனவே சிரஞ்சீவியின் 'காட்பாதர்' படத்திற்கு தமன் இசையமைத்திருந்தார்.
'கார்மேனி செல்வம்' புதிய ரிலீஸ் தேதி
இயக்குனர்கள் சமுத்திரக்கனி, கவுதம் மேனன் இருவருமே தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகின்றனர். ராம் சக்ரீ இயக்கத்தில் இவர்கள் சேர்ந்து நடித்த 'கார்மேனி செல்வம்' படம் கடந்த தீபாவளிக்கு ரிலீசாவதாக அறிவித்தனர். சில காரணங்களால் தள்ளிப்போன நிலையில் ஏப். 3ல் ரிலீசாகும் என தற்போது அறிவித்துள்ளனர்.
