ADDED : மார் 09, 2026 05:31 AM
ஏப்.3ல் ரிலீசாகும் பரத் நடிக்கும் 'காளிதாஸ் 2'
பரத் நடிப்பில் ஸ்ரீசெந்தில் என்பவர் இயக்கிய 'காளிதாஸ்' படம் வரவேற்பை பெற்றது. தற்போது 7 ஆண்டுகளுக்கு பிறகு இதே கூட்டணியில் இதன் 2ம் பாகம் உருவாகியுள்ளது. நடிகைகள் பவானி ஸ்ரீ, அபர்ணதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். முதல் பாகம் போலவே புலனாய்வு திரில்லரில் உருவாகியுள்ள இப்படம் ஏப்.3ல் ரிலீசாகிறது.
சம்பளத்தை குறைத்த பவன் கல்யாண்
நடிகர் பவன் கல்யாண் நடித்த 'உஸ்தாத் பகத்சிங்' படம் மார்ச் 19ல் ரிலீசாகிறது. இதில் நடிக்க சில ஆண்டுகளுக்கு முன்பே 5 கோடி அட்வான்ஸ் உடன் ஒப்பந்தம் ஆனார் பவன் கல்யாண். ஆனால் அரசியல் பயணம் உள்ளிட்ட காரணங்களால் படப்பிடிப்பு பலமுறை தள்ளிப்போனது. தன்னால் ஏற்பட்ட இழப்பு காரணமாக, தனது சம்பளத்தை பவன் கல்யாண் குறிப்பிட்ட அளவு விட்டுக்கொடுத்துள்ளாராம்.
திரிஷா பற்றி பார்த்திபன் கருத்து
மனைவியுடனான விவாகரத்து வழக்கிற்கு மத்தியில் நடிகர் விஜய், நடிகை திரிஷா இருவரும் சமீபத்தில் ஒரே நிற உடையில் ஜோடியாக திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றது பேசுபொருளானது. இதுபற்றி நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் கூறுகையில், ''இந்த குந்தவையை கொஞ்ச நாட்களுக்கு வீட்டுக்குள் குந்த வைக்கிறது நல்லது'' என்றார். 'பொன்னியின் செல்வன்' படத்தில் குந்தவையாக நடித்திருந்த திரிஷா குறித்த பார்த்திபனின் கருத்து வைரலானது.
