தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ மதுரை- சினிமா- 21.03.2026

 மதுரை- சினிமா- 21.03.2026

 மதுரை- சினிமா- 21.03.2026


ADDED : மார் 21, 2026 07:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 21, 2026 07:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இனி ஒரே சினிமா... இந்திய சினிமா: கமல் பேச்சு

தெலுங்கானா அரசின் கட்டார் சினிமா விருதுகள் வழங்கும் விழா ஐதராபாதில் நடந்தது. நடிகர் கமலுக்கு பைடி ஜெய்ராஜ் விருது வழங்கப்பட்டது. அவர் கூறுகையில், “இனி கோலிவுட், டோலிவுட், பாலிவுட், சாண்டல்வுட் என்பதெல்லாம் கிடையாது. ஒரே ஒரு சினிமாதான், அது இந்திய சினிமா” என்றார். இதே நிகழ்வில் 'தி கேர்ள்பிரண்ட்' படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதை ராஷ்மிகா வென்றார்.

தொடர்கிறது மணிரத்னம், ரஹ்மான் கூட்டணி

தக் லைப் படத்திற்கு பிறகு இயக்குனர் மணிரத்னம் அடுத்து விஜய் சேதுபதி, சாய் பல்லவி நடிப்பில் ஒரு படத்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை லைகா உடன் இணைந்து இவரே தயாரிக்கவும் செய்கிறார். இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்க போவதாக தகவல் வந்தது. அதை மறுக்கும் விதமாக இதற்கு ஏ.ஆர்., ரஹ்மான் இசையமைக்கிறார் என அறிவித்துள்ளனர். இதன்மூலம் மணிரத்னம், ரஹ்மான் கூட்டணி தொடர்கிறது.

'புதுப்பேட்டை 2' எழுதி முடித்த செல்வராகவன்

இயக்குனர் செல்வராகவன் ஒரு பக்கம் நடித்துக் கொண்டு 'மெண்டல் மனதில், 7 ஜி ரெயின்போ காலனி 2' ஆகிய படங்களை இயக்கி வருகிறார். எக்ஸ் தளத்தில் ''புதுப்பேட்டை 2' எழுதி முடித்துவிட்டேன்” என பதிவிட்டுள்ளார். ரசிகர்கள் இதை வரவேற்றுள்ளனர். 2006ல் இவரது இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 'புதுப்பேட்டை' படம் வெளியானது.

இசையமைப்பாளரான இயக்குனர் நடிகரான பிரபுதேவா மகன்

'கண்ணெதிரே தோன்றினாள், மஜ்னு, சந்தித்தவேளை' ஆகிய படங்களை இயக்கிய ரவிச்சந்திரன் கடைசியாக 2019ல் 'நட்பதிகாரம்' படத்தை இயக்கினார். அதன்பின் படங்கள் இயக்காமல் இருந்தவர் இப்போது இசையமைப்பாளராகி உள்ளார். ''முதன் முதலாய்'' என்ற இசை ஆல்பத்தை உருவாக்கி உள்ளார். இதில் பிரபுதேவாவின் மகன் ரிஷி நாயகனாக, கியாரா வாசுதேவன் நாயகியாக நடித்துள்ளனர். இந்த பாடலை ஜி.வி., பிரகாஷ் பாடி உள்ளார்.

யோகிபாபுவின் ஆசை

மறைந்த இயக்குனர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில் யோகிபாபு நடித்த 'கெணத்த காணோம்' படம் கடந்தவாரம் வெளியானது. இப்பட நன்றி விழாவில் பேசிய யோகி பாபு, ''ரசிகர்களை இந்த படம் சென்றடைய வேண்டும் என இயக்குனர் விரும்பினார். அந்தக் கனவு நனவாகியுள்ளது. காமெடி மட்டுமல்ல, சாமானிய மக்களின் வாழ்க்கை போராட்டங்கள், அவர்களின் பிரச்னைகளை பிரதிபலிக்கும் வேடங்களிலும் நடிக்க ஆசை'' என்கிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us