ADDED : ஜூலை 15, 2026 02:55 AM
தங்க ஜாக்கெட் அணிந்து கவர்ந்த ஜான்வி கபூர்
ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார் ஜான்வி கபூர். நடிகை அகன்ஷா ரஞ்சன் கபூர் திருமண நிகழ்வில் தங்கத்தினால் ஆன ஜாக்கெட் மற்றும் அதற்கு மேட்சிங்கான ஸ்கர்ட், ஷால் அணிந்து பார்வையாளர்களை கவர்ந்துள்ளார் ஜான்வி. இந்த ஜாக்கெட்டை மும்பையின் பிரபல டிசைனர் சுஹானி பரேக் உருவாக்கி உள்ளார். இதுதொடர்பான போட்டோக்கள் வைரலாகின.
விமர்சித்த ரசிகருக்கு இயக்குனர் பதிலடி
சமீபத்தில் தெலுங்கில் நாகார்ஜுனாவின் மகன் அகில் நடிப்பில் வெளியான லெனின் படம் வரவேற்பை பெற்றுள்ளது. முதல் வெற்றியை அகில் பதிவு செய்துள்ளார். இதில் கர்ணன் கதாபாத்திரம் சிறப்பாக இருந்ததாகவும், ஆனால் நாக் அஸ்வின் இயக்கிய கல்கி படத்தில் கர்ணனை மிகைப்படுத்தி காட்டியது மகாபாரதத்திற்கு செய்யும் அவமரியாதை என்று ரசிகர் ஒருவர் குற்றம் சாட்டினார். இதற்கு பதிலளித்த நாக் அஸ்வின் ''துரோண பருவத்தில் கர்ணனைப் பற்றி அர்ஜுனனிடம் கிருஷ்ணர் புகழ்ந்து பேசிய பகுதியை குறிப்பிட்டு, தயவு செய்து மகாபாரதத்தை வாசியுங்கள். நமது வரலாற்றின் மீது எனக்கு மரியாதை உண்டு. நான் என்ன செய்கிறேன் என்பது எனக்கு தெரியும் என்று பதிலடி கொடுத்துள்ளார்.
