மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் துவக்கம்: 33 மாதங்களுக்குள் தயார் ஆகுமாம்!
மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் துவக்கம்: 33 மாதங்களுக்குள் தயார் ஆகுமாம்!
UPDATED : மே 21, 2024 06:25 PM
ADDED : மே 21, 2024 05:14 PM

மதுரை: மதுரை தோப்பூர் எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை துவங்கி உள்ளதாக, எய்ம்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது. மொத்த கட்டுமான பணியும் 33 மாதங்களுக்குள் கட்டி முடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை தோப்பூரில் 221 ஏக்கரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்தின் திட்ட மதிப்பு ரூ.1978 கோடியிலிருந்து ரூ.2021 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. முதற்கட்டமாக மருத்துவக் கல்லூரி, அவசர சிகிச்சை பிரிவு, உள், வெளி நோயாளிகளுக்கான வார்டு, மாணவர்களுக்கான விடுதி கட்டடங்கள் 18 மாதங்களுக்குள் கட்டி முடிக்க எல்.அண்ட். டி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் இன்று (மே 21) கட்டுமானப் பணிகளை துவங்கி உள்ளதாக, எய்ம்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது. மொத்த கட்டுமான பணியும் 33 மாதங்களுக்குள் கட்டி முடிக்கப்படும். கட்டுமானப் பணிகளுக்கு மாநில சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து தமிழக அரசு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கி உள்ளது.

