துாங்கும் புலியை இடறியதால் விளைவை அனுபவித்தே ஆகணும்: பாகிஸ்தானுக்கு மதுரை ஆதினம் எச்சரிக்கை
துாங்கும் புலியை இடறியதால் விளைவை அனுபவித்தே ஆகணும்: பாகிஸ்தானுக்கு மதுரை ஆதினம் எச்சரிக்கை
UPDATED : ஏப் 28, 2025 06:13 AM
ADDED : ஏப் 28, 2025 05:41 AM

மதுரை : ''ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கிச் சூடு நடத்தி சுற்றுலா பயணிகளை வீழ்த்தியுள்ளனர். இதற்கு துாங்கும் புலியை இடறியதால் ஏற்படும் விளைவை பாகிஸ்தான் அனுபவித்தே ஆக வேண்டும்'' என மதுரை ஆதினம் கூறினார்.
அவர் கூறியதாவது: பாகிஸ்தானை தனிமைப்படுத்தி, அவர்களுடன் உலக நாடுகள் எந்த தொடர்பையும் ஏற்படுத்தி கொள்ளக் கூடாது. இந்தியாவில் வக்ப் வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இன்று மத தீவிரவாதத்தில் ஈடுபடுவது பாகிஸ்தான். அதனை துாண்டி விடுவது சீனா.
காஷ்மீர் விவகாரத்தில் தற்போதைய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. நேரு ஆட்சியில் பல இடங்களை இழந்துள்ளோம். மோடி, நம்பர் ஒன் பிரதமராக உள்ளார். பாரத நாடு சமாதானத்தையே விரும்புகிறது. ஆனால் துாங்கும் புலியை இடறியதால் ஏற்படும் விளைவை பாகிஸ்தான் அனுபவித்தே ஆக வேண்டும்.
தீவிரவாதத்திற்கு எதிராக நதிநீரை நிறுத்துவது சரியான நடவடிக்கைதான். அவர்களுக்கு தண்ணீரை வழங்க கூடாது. அவர்களுக்கு மனிதாபிமானம் இல்லை. இந்தியரை சுட்டு வீழ்த்துகின்றனர். எனவே தண்ணீரை நிறுத்தியது போல, காற்றையும் கூட அவர்களுக்கு கொடுக்கக் கூடாது.
சுதந்திர போராட்ட வீரர் வீர்சாவர்க்கர் குறித்து தவறாக பேசக்கூடாது. ராகுல் சின்ன பையன், அவருக்கு ஒன்றும் தெரியாது. இலங்கையில் தமிழர்களை மத்தியில் காங்., ஆட்சியில் தான் கொலை செய்தார்கள். வாஜ்பாய் ஆட்சியில் கொடுத்த பதிலடி போன்று இம்முறையும் பாகிஸ்தானுக்கு பதிலடி தரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

