உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : ஏப் 12, 2026 10:07 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்: சிறையில் கிடைத்த நண்பரை பார்க்க விருதுநகருக்கு வந்த மதுரை ரவுடி முத்துராமன் 55, வெட்டி கொலை செய்யப்பட்டார்.
மதுரை மாவட்டம் பெருங்குடி கஸ்துாரிபாய் காலனியைச் சேர்ந்தவர் முத்துராமன். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. இவர் கொலை வழக்கில் கைதாகி மதுரை சிறையில் இருந்தபோது விருதுநகர் மாவட்டம் சூலக்கரையை சேர்ந்த ஒருவருடன் நட்பு ஏற்பட்டது.
சிறையில் இருந்து வெளிவந்த முத்துராமன், தன்னுடன் சிறையில் இருந்த நண்பரை பார்க்க சூலக்கரை வந்தார். அப்போது முத்துராமனை பின்தொடர்ந்த கும்பல், சிவகாசி ரோட்டில் சாய்பாபா கோயில் அருகே உள்ள பழைய கோடவுனில் வைத்து அவரை வெட்டி கொலை செய்தது. சூலக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.
