UPDATED : மார் 03, 2024 01:18 PM
ADDED : மார் 03, 2024 01:03 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: கோவையில், வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் இரண்டு நாள் நிகழ்ச்சி இன்று நிறைவுற்றது.
இரண்டாவது நாளான இன்று, கொடிசியா தொழிற் கண்காட்சி வளாகத்தில், இ ஹாலில், உலக அமைதிக்காக ரவிசங்கர் தலைமையில் மகா ருத்ர பூஜை, நடந்தது. இரண்டு மணி நேரம் நடந்த பூஜையில், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், பேரூர் மருதாசல அடிகள் பங்கேற்றனர். கோவையில் உள்ள தொழிலதிபர்கள் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர். பா.ஜ., தலைவர் அண்ணாமலை, செயலாளர் முருகானந்தம், ரவிசங்கரை சந்தித்து ஆசி பெற்றனர்.

