ADDED : ஜூலை 29, 2025 07:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை,: மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்த தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ், தமிழகத்துக்கான கல்வி நிதியை விடுவிக்கும்படி வலியுறுத்தினார்.
டில்லியில் நேற்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை, தமிழக கல்வி அமைச்சர் மகேஷ், பார்லிமென்ட் தி.மு.க., தலைவர் கனிமொழி ஆகியோர் சந்தித்தனர்.
அப்போது, தமிழகத்துக்கான, 2024 - 2025ம் ஆண்டுக்கான சமக்ர சிக் ஷா நிதியான, 2,152 கோடி ரூபாயையும், கட்டாய கல்வி நிதியான, 617 கோடி ரூபாயையும், இந்தாண்டுக்கான முதல் பருவ நிதியையும் வழங்கும்படி வலியுறுத்தி மனு அளித்தனர்.