தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ புதிய டி.ஜி.பி.,யாக பொறுப்பேற்றார் மகேஷ்குமார் அகர்வால்

 புதிய டி.ஜி.பி.,யாக பொறுப்பேற்றார் மகேஷ்குமார் அகர்வால்

 புதிய டி.ஜி.பி.,யாக பொறுப்பேற்றார் மகேஷ்குமார் அகர்வால்


ADDED : ஜூன் 04, 2026 03:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 04, 2026 03:33 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: ''சட்டம் - ஒழுங்கை பேணி பாதுகாப்பதுடன், போதை பொருள் ஒழிப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் கட்டுப்படுத்தப்படும்,'' என, புதிய டி.ஜி.பி., மகேஷ்குமார் அகர்வால் கூறினார்.

தமிழக காவல் துறையின், 34வது டி.ஜி.பி.,யாக, மகேஷ்குமார் அகர்வால் நேற்று நியமனம் செய்யப்பட்டார். இதையடுத்து, மகேஷ்குமார் அகர்வால் நேற்று முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னதாக, அவருக்கு போலீசாரின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

பின்னர், டி.ஜி.பி., அலுவலகத்தில் உள்ள காவலர் நினைவுச் சின்னத்துக்கு மலர் வளையம் வைத்து, டி.ஜி.பி., வீரவணக்கம் செலுத்தினார்.

மகேஷ்குமார் அகர்வால் கூறியதாவது:

தமிழக மக்களுக்கு சேவை செய்ய, இந்த பொறுப்பை வழங்கிய முதல்வர் விஜய்க்கு நன்றி. தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு பேணி பாதுகாக்கப்படும்.

போதை பொருள் ஒழிப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு மற்றும் சைபர் குற்றங்கள் தடுப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தப்படும். இதற்கு, பொது மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us