ADDED : ஜூன் 04, 2026 03:34 AM

சென்னை: 'தமிழகத்தில், 16 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது, கன்னியாகுமரி மாவட்டத்துக்கு, மிக கனமழைக்கான, 'ஆரஞ்ச்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கு பகுதியில், 9 செ.மீ., மழை பெய்துள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை, இன்று தொடங்குவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.
கன்னியாகுமரி மாவட்டத்தில், சில இடங்களில், இன்று மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே, 'ஆரஞ்ச்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்காசி, திருநெல்வேலி, நீலகிரி, கோவை, தேனி, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்துார், வேலுார், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில், சில இடங்களில், இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன், கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை நகரில் அதிகபட்ச வெப்பநிலை, 40 டிகிரி செல்ஷியஸ் வரை பதிவாக வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
