ADDED : செப் 10, 2026 11:48 PM
சென்னை: மஹிந்திரா அண்டு மஹிந்திரா நிறுவனம், புதிய, 'வீரோ 1.1 எக்ஸ். எக்ஸ்.எல்.சி.என்.ஜி' மற்றும் மேம்படுத்தப்பட்ட, 'வீரோ டீசல்' வாகனங்களை அறிமுகம் செய்துள்ளது.
கடந்த 2024 செப்டம்பரில் அறிமுகம் செய்யப்பட்ட, 'வீரோ' 3.50 டன்னுக்கு உட்பட்ட எல்.சி.வி., பிரிவில், புதுமை மற்றும் நம்பகத் தன்மைக்கு சான்றாக உள்ளது.
சிறப்பான மைலேஜ், சிறந்த செயல்திறன், மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டுள்ளது.
புதிய வீரோ 1.1 எக்ஸ்.எக்ஸ்.எல்.சி.என்.ஜி., நகரத்திற்கு உள்ளான பயன்பாடுகளுக்காகவே, பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இது, 1.1 டன் சுமை திறன் மற்றும் 9.50 அடி சரக்கு தளத்தை கொண்டிருப் பதால், சிறிய அள விலான வாகன வடிவிலேயே, அதிக சுமைகளை ஏற்றிச் செல்ல முடிகிறது.
மேம்படுத்தப்பட்ட வீரோ டீசல், 'யோசனைக்கும் அப்பாற்பட்ட' தத்துவத்துடன், வீரோ மாடல் டச் ஸ்கிரீன், பவர் விண்டோஸ், டிரைவர் ஏர்பேக் மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா போன்ற இத்துறையிலேயே முதன் முறையான அம்சங்களை வழங்குகிறது.
