பராமரிப்பு பணி கோவை ரயில்கள் போத்தனுார் வழியே இயக்கம்
பராமரிப்பு பணி கோவை ரயில்கள் போத்தனுார் வழியே இயக்கம்
ADDED : மே 02, 2025 12:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்:கோவையில் பராமரிப்பு பணியால், 15 நாட்களுக்கு சில ரயில்கள் போத்தனுார் வழியே இயக்கப்படுகிறது.
இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிர்வாக அறிக்கை: கோவை - போத்தனுார் தடத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளதால், நேற்று முதல், 15ம் தேதி வரை, காலை, 6:00 மணிக்கு புறப்படும் ஆலப்புழா - தன்பாத் எக்ஸ்பிரஸ்; காலை, 9:10க்கு கிளம்பும் எர்ணாகுளம் - பெங்களூரு எக்ஸ்பிரஸ்.
மே, 4, 11 அதிகாலை 1:25க்கு புறப்படும் திருநெல்வேலி - பிலாஷ்பூர் எக்ஸ்பிரஸ்.
மே, 7, 14 காலை 8:40க்கு கிளம்பும் எர்ணாகுளம் - பிலாஷ்பூர் எக்ஸ்பிரஸ் ரயில்கள், கோவை வராமல் போத்தனுார், இருகூர் தடத்தில் இயக்கப்படும்.
கோவை செல்லும் பயணியர், போத்தனுாரில் இறங்கி செல்ல வசதியாக, அங்கு ஐந்து நிமிடம் ரயில்கள் நின்று செல்லும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.