தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/பராமரிப்பு பணி எதிரொலி திருப்பதி விரைவு ரயில் ரத்து

பராமரிப்பு பணி எதிரொலி திருப்பதி விரைவு ரயில் ரத்து

பராமரிப்பு பணி எதிரொலி திருப்பதி விரைவு ரயில் ரத்து


ADDED : மார் 19, 2024 05:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 19, 2024 05:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்: தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட அலுவலக செய்திக்குறிப்பு:

தெற்கு மத்திய ரயில்வே கோட்டத்துக்குட்பட்ட திருப்பதி ரயில் நிலையத்தில் பொறியியல் மேம்பாட்டு பணி நடக்கிறது. இதையொட்டி விழுப்புரம் - திருப்பதி வரை செல்லும் முன்பதிவில்லா விரைவு ரயில் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரத்தில் காலை 5:35 மணிக்கு புறப்படும் விழுப்புரம் - திருப்பதி முன்பதிவில்லா விரைவு ரயில் (16854) இன்று 19ம் தேதி முதல் வரும் 23ம் தேதி வரை காட்பாடியோடு நிறுத்தப்படுகிறது.

எதிர் வழித்தடத்தில் திருப்பதியில் இருந்து மதியம் 1:40 மணிக்கு புறப்படும் திருப்பதி - விழுப்புரம் முன்பதிவில்லா விரைவு ரயில் (16853) இன்று 19ம் தேதி முதல் வரும் 23ம் தேதி வரை காட்பாடியில் இருந்து மாலை 4:30 மணிக்கு விழுப்புரத்திற்கு புறப்படும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us