தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/வேலூர்/ராணுவ ரகசியங்களை பகிர்ந்த 'மாஜி' ராணுவ அதிகாரி கைது

ராணுவ ரகசியங்களை பகிர்ந்த 'மாஜி' ராணுவ அதிகாரி கைது

ராணுவ ரகசியங்களை பகிர்ந்த 'மாஜி' ராணுவ அதிகாரி கைது


UPDATED : அக் 25, 2026 08:53 PM

ADDED : அக் 25, 2026 08:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 25, 2026 08:53 PM ADDED : அக் 25, 2026 08:16 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வேலுார்: வேலுார் அருகே ஓராண்டுக்கு மேலாக ராணுவ ரகசியங்களை, பெண்ணிடம் பகிர்ந்த முன்னாள் ராணுவ அதிகாரி பாபு, 52. கைது செய்யப்பட்டார்.

வேலுார் மாவட்டம், கணியம்பாடி, கீழ்வல்லத்தைச் சேர்ந்தவர் பாபு. இவர், கடந்த ஆண்டு, ராணுவ தளவாட பிரிவில் கேப்டனாக பணியாற்றி ஓய்வு பெற்றார். இதையடுத்து, அவர் செந்த ஊரான கீழ்வல்லம் பகுதியில் தற்போது வசிக்கிறார்.

இந்நிலையில், பாபுவின் மொபைல்போன் வாட்ஸாப் எண்ணுக்கு, அடையாளம் தெரியாத பெண் ஒருவர் அறிமுகம் ஆகியுள்ளார். அந்த பெண், பாபுவிடம் கவர்ச்சியாக, பேசியுள்ளார். 'தான் மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில், ஒரு திட்டம் தயாரிக்க உள்ளளேன்; அதற்கு, சில தகவல்கள் வேண்டும், அதை நீங்கள் தரமுடியுமா?' என கேட்டுள்ளார்.

அதற்கு, பாபு தனக்கு தெரிந்த ராணுவம் தொடர்புடைய தகவல்களை, கடந்த ஓராண்டாக வாட்ஸாப்பில் அனுப்பியுள்ளார்.

இதையறிந்த, மத்திய அரசின் உளவுத்துறை அதிகாரிகள், கீழ்வல்லத்தில் உள்ள பாபுவின் வீட்டுக்கு நேற்று முன்தினம் சென்றனர். அங்கிருந்த பாபுவை, வேலுார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று, நேற்று வரை விசாரணை நடத்தினர்.

அவர்களது புகாரில், வேலுார் போலீசார் வழக்கு பதிந்து, பாபுவை கைது செய்தனர். மேலும், அவரிடம், அந்த பெண் யார்? எந்த நாட்டைச் சேர்ந்தவர்? என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us