'ஏரோ பிரிட்ஜ்'ஜை கட்டாயமாக்குங்கள்: சிதம்பரம் வலியுறுத்தல்
'ஏரோ பிரிட்ஜ்'ஜை கட்டாயமாக்குங்கள்: சிதம்பரம் வலியுறுத்தல்
ADDED : டிச 30, 2025 06:36 AM

சென்னை: 'விமான பயணியரின் சிரமத்தை குறைக்க, 'ஏரோ பிரிட்ஜ்'ஜை கட்டாயமாக்க வேண்டும்' என, முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் வலியுறுத்தி உள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
விமானத்தில் ஏறவும் இறங்கவும், ஏணிப்படி அல்லது சாய்வு தளம் பயன்படுத்தப்படுகிறது. இது, முதியோர், மாற்றுத்திறனாளிகள், கைக்குழந்தைகளுடன் வருவோர், சக்கர நாற்காலியை பயன்படுத்துவோருக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துகிறது.
ஆனாலும், பயன்படுத்தக் கூடிய நிலையில் காலியாக உள்ள ஏரோபிரிட்ஜை, விமான நிறுவனங்கள் பயன்படுத்துவதில்லை.
இது, தவறான மற்றும் அலட்சியமான போக்கு. பயணியர் விரைவாக விமானத்தில் ஏறவும், இறங்கவும், 'ஏரோபிரிட்ஜ்' உதவுகிறது.
எனவே, ஏரோ பிரிட்ஜை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என, விமான நிறுவனங்களுக்கு, சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

