உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : நவ 11, 2026 12:14 AM
அ நிறம் | அளவு
திருப்பரங்குன்றம் மலை மீது, இறந்தோர் நினைவாக மோட்ச தீபம் ஏற்றும் இடத்தை தவிர்த்து விட்டு, தீபம் ஏற்றுவதற்காகவே நம் முன்னோர் மலை மேல் தீபத்துாண் நிறுவிய இடத்தில்தான், கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும்.
1920 ல் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் தர்கா அமைந்துள்ள இடம் தவிர, ஒட்டுமொத்த மலையும் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு மட்டுமே சொந்தம் என தெளிவாக உள்ளது. 1996 ல், நீதிபதி கனகராஜ் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் தான், மலை மீதுள்ள தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும் என, தற்போது ஹிந்துக்கள் போராடுகின்றனர்.
முழு மலையும் முருகனுக்கே சொந்தம் என பல தீர்ப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, வரும் கார்த்திகை திருநாளில் மலை மீது தீபம் ஏற்றப்படுவதை, தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.
– கதலி நரசிங்க பெருமாள்
தமிழக செயலர், பா.ஜ.,
