ADDED : மே 30, 2026 02:42 AM

ராமநாதபுரம் மாவட்டம், பால்கரை கிராமத்தை சேர்ந்த தமிழ்செல்வி, மூக்கு தண்டுவளைவு அறுவை சிகிச்சைக்காக, ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லுாரியில் அனுமதிக்கப்பட்டார். அறுவை சிகிச்சைக்கு பின், தற்போது வரை சுயநினைவை இழந்த நிலையில் இருக்கிறார்.
அடுத்தடுத்து, அரசு மருத்துவமனைகளின் அலட்சியப்போக்கும், தவறான மருத்துவமும் தொடர்வது பெரும் கவலை அளிக்கிறது. இனியாவது மருத்துவமனைகளின் துாய்மை, பாதுகாப்பு, டாக்டர்கள், செவிலியர்கள் வருகை, மருத்துவ தரத்தை அரசு உறுதி செய்ய வேண்டும்.
கடந்த ஆட்சியில் நடந்த அலட்சிய செயல்பாடு, இப்போதும் தொடர்வது ஏற்புடையது இல்லை. அரசு மருத்துவமனைகளில் தரமற்ற மருத்துவமும், அரசு பள்ளிகளில் தரமற்ற கல்வியும் தொடர்வதை, தமிழக வெற்றிக் கழக அரசு வேடிக்கை பார்ப்பது, ஓட்டளித்த மக்களை ஏமாற்றும் செயல்.
- சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
நாம் தமிழர் கட்சி
