தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தலில் தலைமறைவான நபர் சிக்கினார்

ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தலில் தலைமறைவான நபர் சிக்கினார்

ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தலில் தலைமறைவான நபர் சிக்கினார்


ADDED : நவ 28, 2026 10:47 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 28, 2026 10:47 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே, ரியல் எஸ்டேட் அதிபர் கோபாலகிருஷ்ணன், 65, என்பவர் கடத்தப்பட்ட வழக்கில், தலைமறைவாக இருந்த, மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், பங்காரத்தை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன்; ரியல் எஸ்டேட் அதிபர். இவரை, நவ., 5-ல் மர்ம கும்பல் ஒன்று கடத்தியது. அவர்களிடம் இருந்து தப்பிய கோபாலகிருஷ்ணன், ராசிபுரம் போலீசில் புகாரளித்தார். விசாரணையில், நிலத்தகராறில் கடத்தப்பட்டது தெரியவந்தது.

மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய, சேலம் மாவட்டம், மல்லுார் தனபால், 48, பூர்ணசந்திரன், 43, சந்தியூர் ஆட்டையாம்பட்டி வெங்கடாசலம், 52, நாமக்கல் மாணிக்கம், 49, கார்த்திகேயன், 40, ஜெகன், 32, ராசிபுரம் அசோக்குமார், 47, வக்கீல் சுந்தர்ராஜன், 47, கள்ளக்குறிச்சி வெங்கடேசன், 38, ஆகிய, ஒன்பது பேரை போலீசார் ஏற்கனவே கைது செய்தனர்.

இவ்வழக்கில் தொடர்புடைய, பத்தாவ-து குற்றவாளியான திருப்பூரில் தலைமறைவாக இருந்த பி.மேட்டூர், கே.கே.வலசுவை சேர்ந்த கவுதம், 31, என்பவரை, ராசிபுரம் போலீசார், நேற்று கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us