'ராங் கால்' பேசி அறிமுகமாகி சிறுமியை மணந்த நபர் கைது
'ராங் கால்' பேசி அறிமுகமாகி சிறுமியை மணந்த நபர் கைது
ADDED : ஜூலை 15, 2025 10:13 PM

சூலூர்; பள்ளி மாணவியை ஆசை வார்த்தை கூறி, திருமணம் செய்து கொண்ட வாலிபர், போக்சோ சட்டத்தில், சிறையில் அடைக்கப்பட்டார்.
சூலூர் அருகே அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி, சந்தைக்கு சென்றபோது மாயமானார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். அதில், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஏழுமலை, 29 என்பவர், பள்ளி மாணவியுடன், போனில் 'ராங் கால்' பேசி அறிமுகமாகி உள்ளார்.
தொடர்ந்து இருவரும் போனில் அடிக்கடி பேசி வந்துள்ளனர். செஞ்சேரிமலைக்கு வந்த ஏழுமலை, மாணவியை பார்த்து ஆசை வார்த்தை கூறி, தன் வசப்படுத்தி உள்ளார். கடந்த, 13ம் தேதி சந்தைக்கு சென்ற மாணவி மாயமானார்.
சேலத்துக்கு சென்ற மாணவியை, ஏழுமலை, திருவண்ணாமலை அழைத்து சென்று, திருமணம் செய்து கொண்டது தெரிந்தது. தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார், இருவரையும் கண்டு பிடித்தனர். ஏழுமலை மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, கைது செய்து சிறையில் அடைத்தனர்.

