ADDED : ஜூலை 28, 2025 02:31 AM

திண்டிவனம்: மரக்காணம் அருகே இறந்த கடல் குதிரைகளை வைத்திருந்த ஆசாமியை, திண்டிவனம் வனத்துறையினர் கைது செய்தனர்.
தமிழ்நாடு வனம் மற்றும் வன உயிரினக்குற்றங்கள் கட்டுப்பாட்டு பிரிவிற்கு கடல் வாழ் உயிரினமான கடல்குதிரைகள் கடத்தப்படுவதாக நேற்று தகவல் வந்தது.
அதன்பேரில், திண்டிவனம் வனச்சரக அலுவலர் புவனேஷ் தலைமையில், ஊசுட்டேரி பிரிவு வனவர் கோகுலட்சுமி, வனக்காப்பாளர்கள் இளையராஜா, மணிராவ், முத்துசீனுவாசன் ஆகியோர், மரக்காணம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது மரக்காணம் சாமில் அருகில், இரு சக்கர வாகனத்தில் வந்தவரை சந்தேகத்தின் பிடித்து விசாரித்தனர். அப்போது அவரது பையில் 14 இறந்த கடல்குதிரைகளை வைத்திருந்து கண்டுபிடிக்கப்பட்டது. பிடிபட்ட நபர் மரக்காணம், கூனிமேடு கிராமத்தை சேர்ந்த தமீம் அன்சாரி, 47; என்று தெரியவந்தது.
திண்டிவனம் வனத்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்து, இரண்டாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத் தனர்.