இளைஞரை பாலியல் தொந்தரவு செய்தவர் குண்டாசில் கைது
இளைஞரை பாலியல் தொந்தரவு செய்தவர் குண்டாசில் கைது
ADDED : நவ 17, 2025 01:52 AM

நத்தம்: நத்தத்தில் இளைஞரை கட்டாயபடுத்தி பாலியல் தொந்தரவு செய்தவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம்- நேருநகரை சேர்ந்தவர் 25 வயது இளைஞர். தனியார் பஸ்களை கிளீன் செய்யும் வேலை செய்து வருகிறார். அவரை அக்.,27 இரவு நத்தத்தை சேர்ந்த அப்துல்ரகுமான் 22, அவரது நண்பர் யாசர்அராபத் 23, கோவில்பட்டி பகுதியில் உள்ள சுடுகாட்டிற்கு அழைத்து சென்று பாலியல் துன்புறுத்தல் செய்ததுடன் அடித்து துன்புறுத்தினர்.
மேலும் வீடியோ எடுத்து இளைஞருக்கு அனுப்பி வெளியே சொன்னால் கொன்று விடுவோம் என மிரட்டலும் விடுத்தனர். புகாரின் பேரில் நத்தம் போலீசார் அப்துல் ரகுமானை கைது செய்து சிறையில் அடைத்தனர். யாசர் அராபத் தலைமறைவானார்.
தொடர்ந்து, அப்துல்ரகுமானை குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி., பிரதீப் பரிந்துரையின் பேரில் கலெக்டர் சரவணன் உத்தரவிட்டார். மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

