ADDED : நவ 07, 2026 06:27 PM
வேலுார்: வேலுாரில், தண்டவாளத்தில் மொபைல் போனில் பேசியபடி நடந்து சென்ற வாலிபர் ரயில் மோதி உயிரிழந்தார்.
வேலுார், கன்ட்டோண்மென்ட் ரயில் நிலையத்திலிருந்து, அரக்கோணம் நோக்கி இன்று (நவ.,7) காலை அரக்கோணம் பாசஞ்சர் ரயில் புறப்பட்டு சென்றது. கன்சால்பேட் அருகே ரயில் வந்தபோது, 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் மது போதையில், மொபைல் போனில் பேசியபடி தண்டவாளத்தில் நடந்து சென்றார்.
அப்போது, பின்னால் வந்த ரயில் வாலிபர் மீது மோதியதில் துாக்கி வீசப்பட்ட அவர், தண்டவாளத்தை ஒட்டியுள்ள கால்வாயில் விழுந்தார். ரயில் இன்ஜீன் டிரைவர் ரயில்வே போலீசாருக்கு தெரிவித்தார்.
ரயில்வே போலீசார் பொதுமக்கள் உதவியுடன் இறந்த வாலிபரின் சடலத்தை மீட்டனர். காட்பாடி ரயில்வே போலீசார் வழக்குப்பதிந்து, இறந்தவர் யார் ? எந்த ஊரைச் சேர்ந்தவர் ? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
