ADDED : மார் 29, 2026 12:50 AM
காஜியாபாத்: போதையில் தடுமாறி, கழிவு நீர் கால்வாயில் விழுந்த தொழிலாளி உயிரிழந்தார்.
உத்தர பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டம் சந்தவுசி கிராமத்தைச் சேர்ந்தவர் வசீம், 34. கூலித் தொழிலாளியான இவர், காஜியாபாத் விஜய் நகர் அருகே மவாய் கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்தார்.
நேற்று முன்தினம் மலையில் வேலை முடிந்தவுடன் மது குடித்து விட்டு, வீட்டுக்கு தள்ளாடியபடி நடந்து சென்றார். லேபர் சவுக் அருகே, திறந்து கிடந்த கழிவுநீர் கால்வாயில் வசீம் நிலைதடுமாறி விழுந்தார்.
தகவல் அறிந்து, போலீசார் வந்தனர். கிராம மக்கள் உதவியுடன் மீட்கப்பட்ட வசீம், அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். பரிசோதனை செய்த டாக்டர்கள், வசீம் ஏற்கனவே மரணம் அடைந்து விட்டதை உறுதி செய்தனர். அவரது உடல், உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து, போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
